உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  திருச்செந்துார் கோவிலில் கட்டண உயர்வு கூடாது

 திருச்செந்துார் கோவிலில் கட்டண உயர்வு கூடாது

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பல்வேறு வழிபாட்டு சேவைகள், தரிசனங்கள் தொடர்பான கட்டணங்களை, பல மடங்கு உயர்த்தியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கோவில் நிர்வாகம், பக்தர்களின் ஆன்மிக உணர்வுகளை புரிந்து செயல்படுகிறதா அல்லது வருவாய் பெருக்கும் வணிக நிறுவனமாக செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.ஹிந்து சமய கோவில்கள் என்பது, பக்தர்களின் நம்பிக்கை மையங்கள்; அவை வருவாய் ஈட்டும், வணிக வளாகங்களாக மாற்றப்படக் கூடாது. மேலும் மேலும் கட்டணங்களை உயர்த்துவது, பக்தர்களை பொருளாதார ரீதியாக சுரண்டுவதாகும்; ஹிந்து சமய அடிப்படை சமத்துவ கொள்கைக்கு எதிரானதாகும். எனவே, திருச்செந்துார் கோவிலில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டண உயர்வையும் உடனடியாக திரும்ப பெற வேண்டும். கோவில்களின் வருவாய் மற்றும் செலவினங்கள் தொடர்பாக, முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். - ராம ரவிக்குமார், தலைவர், ஹிந்து தமிழர் கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ