உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவில் சர்வீசஸ் தேர்வில் வென்றவருக்கு பாராட்டு விழா

சிவில் சர்வீசஸ் தேர்வில் வென்றவருக்கு பாராட்டு விழா

கோவை: சிவில் சர்வீசஸ் தேர்வில், ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்ற அரவிந்த்குமாருக்கு, கிணத்துகடவிலுள்ள ஈஸ்வர் இன்ஜி., கல்லூரி சார்பில், பாராட்டு விழா நடந்தது. கல்லூரியின் ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில் நடந்த விழாவில், முதல்வர் சுதா வரவேற்றார். கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் கனகராஜ் முன்னிலை வகித்தார். தமிழக திட்டக்குழு உறுப்பினர் பாலகுருசாமி பேசியதாவது: ஐ.ஏ.எஸ்., பதவி, நமது நாட்டிலுள்ள உயர்ந்த பதவிகளில் ஒன்றாக கருத்தப்படுகிறது; பலரின் வாழ்க்கை கனவாகவும் உள்ளது. இதனை அடைய நம்மிடம் தன்னம்பிக்கை, விடா முயற்சியுடன் பொது அறிவும் மிக முக்கியமானது. இப்பதவி வகிப்போருக்கு, எப்போதும் முனைப்புடன் செயல்படுதல், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை, எதையும் அலசி, ஆராயும் திறமை ஆகிய மூன்று குணங்களும் காணப்பட வேண்டும். மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெறவும், பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடையவும், மாணவர்கள் ஆசிரியர்களிடம் கேள்விகளை கேட்கவேண்டும். நமது நாட்டில் எங்கு பார்த்தாலும், சீனா போன்ற வெளிநாட்டு இறக்குமதி பொருட்கள், அதிகளவில் விற்கப்படுகின்றன. இவை, நமது நாட்டின் <உற்பத்தி விகிதம் மிகவும் குறைந்து வருவதற்கான சான்றுகளாகும். இக்குறைபாட்டினை போக்க, நமது நாட்டில் உற்பத்தி விகிதத்தை அதிகரிக்க முயலவேண்டும். பிற நாடுகளிலிருந்து கிடைக்கும் மலிவான பொருட்களை பயன்படுத்தாமல், நமது நாட்டிலேயே அவற்றை உற்பத்தி செய்து, மக்களுக்கு குறைந்த விலையில், தரமான பொருட்களாக வழங்க, தேவையான முயற்சிகளில் அனைவரும் முனைப்புடன் ஈடுபடவேண்டும். இவ்வாறு, பாலகுருசாமி பேசினார்.ஈரோடு சிவில் சர்வீசஸ் தேர்வு மைய முதல்வர் சண்முகசுந்தரம் உள்பட பலர் பேசினர். கல்லூரியின் இயக்குனர் ராஜாராம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ