உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேடியோ காலர் பொருத்தும் திட்டத்தில் சொதப்பல்; மயக்கம் தெளியாமல் வரையாடு உயிரிழப்பு

ரேடியோ காலர் பொருத்தும் திட்டத்தில் சொதப்பல்; மயக்கம் தெளியாமல் வரையாடு உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கூடலூர்: மயக்க மருந்து செலுத்தி ரேடியோ காலர் பொருத்தப்பட்ட வரையாடு, மயக்கம் தெளியாமலேயே உயிரிழந்தது.தமிழகத்தின் மாநில விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள வரையாடு, நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே காணப்படுகிறது. மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ள வரையாடுகளை பாதுகாக்கவும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தமிழக அரசு வனத்துறை மூலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வரையாடுகளுக்கு ரேடியோ காலர் பொருத்தி அவற்றின் வாழ்விடங்களை கண்காணிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் முக்குருத்தி தேசிய பூங்கா, அவலாஞ்சி பிரிவு, வெஸ்டர்ன் கேட்ச்சிமென்ட் வனப்பகுதி உள்ள இரும்பு பாலம் சாலையில் நேற்று முன் தினம் இந்த பணிகள் நடந்தன. நீலகிரி வரையாடு திட்ட இயக்குனர் கணேசன் தலைமையில், கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் வரையாடுகளுக்கு 'ரேடியோ காலர் பொருத்தப்பட்டது.வரையாடு ஒன்றுக்கு மயக்க ஊசி செலுத்தி, அதன் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி வனப்பகுதியில் விடுவித்தனர். இரண்டாவதாக பெண் வரையாடுக்கு மயக்க ஊசி செலுத்தி ரேடியோ காலர் பொருத்தினர். மயக்க நிலையில் இருந்து வெளிவருவதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், மயக்கம் தெளிவு பெறாமலேயே வரையாடு உயிரிழந்தது. இதனால் ரேடியோ காலர் பொருத்தம் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அனைவரும் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தனர். இதனால் ரேடியோ காலர் பொருத்தும் திட்டம் பின்னடைவை சந்திக்கும் என வனத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா உத்தரவுப்படி, பெண் வரையாடு உடலை சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி வன உயிரியல் துறை தலைவர் ஸ்ரீ குமார், ஆனைமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் விஜயராகவன், முதுமலை புலிகள் காப்பல கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர். வனத்துறையினர் கூறுகையில் உயிரிழந்த பெண் வரையாடுக்கு 8 வயது இருக்கும். அதன் இருதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய உள் உறுப்புகள் பலவீனம் அடைத்திருந்ததால் உயிரிழந்துள்ளது. அதன் உடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Barakat Ali
டிச 08, 2024 19:07

வனத்தில் வாசம் ..... அங்கே சரக்குக்கு தோதா பிரியாணி போட ரெடி .....


Apposthalan samlin
டிச 08, 2024 17:43

மயக்க ஊசி போட டாக்டருக்கும் இந்த மருந்தை செலுத்தி ரேடியோ காலர் பொருத்தலாம்


Bhaskaran
டிச 08, 2024 17:10

தத்திபயலுவளா இருப்பாங்க போலிருக்கு


rasaa
டிச 08, 2024 13:48

உண்மையாக, கருத்துடன், முறையாக கற்றவர்கள் இல்லாமல் வெறும் இட ஒதுக்கீடு மூலம் வருபவர்கள் ......


முருகன்
டிச 08, 2024 11:24

இங்கே எவருக்கும் முறையான பயிற்சி எதிலுமே இல்லை


அப்பாவி
டிச 08, 2024 10:33

ஆளுக்கு ஒரு பீர்யாணி பார்சேல்


Lawrence k
டிச 08, 2024 10:28

ஒரு ஜீவன கொண்டு நீங்களே?


ديفيد رافائيل
டிச 08, 2024 10:27

உண்மை தான்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 08, 2024 09:50

மயக்க மருந்தின் அளவு அதிகமாகியிருக்கலாம் ... அதை மறைக்க ஒரு பொய் ....


Natarajan Ramanathan
டிச 08, 2024 08:56

எப்படியோ இன்று வனத்துறை ஊழியர்களுக்கு விருந்து கிடைத்துவிடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை