உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருவாய்க்கு அதிகமாக சொத்துக்களை வாரிக்குவித்த பெண் அதிகாரி; ரெய்டில் சிக்கியவை ஏராளம்!

வருவாய்க்கு அதிகமாக சொத்துக்களை வாரிக்குவித்த பெண் அதிகாரி; ரெய்டில் சிக்கியவை ஏராளம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், பெண் ஐ.ஏ.எஸ்., உட்பட எட்டு அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் லோக் ஆயுக்தா போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். எட்டு அதிகாரிகளும் 37.41 கோடி ரூபாய்க்கு, சொத்து குவித்தது தெரியவந்துள்ளது.கர்நாடகாவில் வருமானத்திற்கு அதிகமாக, சொத்து சேர்க்கும் அரசு அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி நகை, பணம், சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்வது வழக்கம்.இந்நிலையில், பெங்களூரு ரயில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன சிறப்பு துணை கமிஷனரான, ஐ.ஏ.எஸ்., அதிகாரி வசந்தி அமர், பெங்களூரு மாநகராட்சியின் சி.வி.ராமன்நகர் மண்டல நிர்வாக இன்ஜினியர் யரப்பா ரெட்டி, பெங்களூரு எம்.எஸ்., பில்டிங்கில் உள்ள நகர திட்டமிடல் துறை அலுவலக உதவி இயக்குநர் பாகலி மாருதி.மைசூரு மாநகராட்சி நிர்வாக அலுவலக ஊழியர் வெங்கடராமா, துமகூரில் உள்ள கர்நாடக தொழில்பகுதி மேம்பாட்டுக் கழக உதவி நிர்வாக இன்ஜினியர் ராஜேஷ், கலபுரகியில் சுகாதாரத் துறை அதிகாரி சுனில் குமார், கொப்பால் தொழில்துறை மைய துணை இயக்குநர் சேக்கு சவுஹான், குடகில் உள்ள திறன் மேம்பாட்டுக் கழக இணை இயக்குநர் மஞ்சுநாத சாமி ஆகிய எட்டு பேரும், தங்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக, லோக் ஆயுக்தா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இந்த தகவலின் அடிப்படையில், எட்டு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் நேற்று காலை 6:00 மணி முதலே ஒரே நேரத்தில் சோதனை துவங்கியது. பெங்களூரு, மைசூரு, துமகூரு, கலபுரகி, கொப்பால், குடகு ஆகிய 6 மாவட்டங்களில் 41 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.இந்த சோதனையின்போது கணக்கில் வராத கட்டு கட்டாக பணம், தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் சிக்கின. சொத்து, நிலம் வாங்கி குவித்ததற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. மாலை 6:00 மணி வரை சோதனை நடந்தது.சோதனைக்கு பின் எட்டு அதிகாரிகள் வீடுகளின் இருந்து 37 கோடியே 41 லட்சத்து 52,996 ரூபாய் மதிப்பிலான பணம், நகை, வாகனம், சொத்து ஆவணங்கள், மற்றவை என அசையும், அசையா சொத்துகள் சிக்கியதாக, லோக் ஆயுக்தா தெரிவித்துள்ளது.பெங்களூரு வடக்கு சிறப்பு துணை கமிஷனர் - 3 பதவியில் இருந்தபோது, வசந்தி அமர், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தாசனபுராவில் 10 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக விடுவித்ததாக அவர் மீது, சமூக ஆர்வலர் பிரசாந்த் அளித்த புகார் அளித்தார். நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 16ம் தேதி வசந்தி அமர் மீது, ஹலசூரு கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சிக்கியது என்ன?

அதிகாரிகள் பெயர்- மொத்த மதிப்பு (ரூபாய்) 1. வசந்தி அமர்- 9,02,66,390 2. யரப்பா ரெட்டி - 2,62,64,700 3. பாகலி மாருதி - 6,34,72,4504. வெங்கடராமா- 3,71,59,138 5. ராஜேஷ்- 3,67,73,3036. சுனில்குமார்- 4,34,23,897 7. சேக்கு சவுஹான் - 2,47,54,218 8. மஞ்சுநாதசாமி - 5,20,38,900 மொத்தம்- 37,41,52,996


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

c.mohanraj raj
ஜூலை 25, 2025 01:16

நீ தமிழ்நாடு தமிழ்நாடு வாம்மா இன்னும் வாரிக் குவிக்கலாம் யார் ஒன்றும் செய்ய முடியாது உன்னை


Ramar P P
ஜூலை 25, 2025 09:24

சரியான கருத்து


Barakat Ali
ஜூலை 24, 2025 13:48

எப்படிங்க இதெல்லாம்? நாங்க ஒரு வீடு கட்டுனாக்கூட எங்கே போனாலும் பான் கார்டுதான் பேசுது.. சட்டம் சாதாரண மனிதன் என்றால் கடுமை காட்டுமோ ????


Ganesun Iyer
ஜூலை 24, 2025 13:31

வசந்தி அமர்- 9,02,66,390 மற்ற ஆண்களை பின்னுக்கு தள்ளி முதலில் வந்த லஞ்ச பெண்மணி வாழ்க ..


vaithinathasami jayakumar
ஜூலை 24, 2025 21:02

கொள்ளையில் ஆண்களைவிட பெண்களே கறார்...


aaruthirumalai
ஜூலை 24, 2025 13:27

அந்த அம்மா முகத்த பாருங்க எவ்வுளவு பூரிப்பு மகிழ்ச்சி பணக்கலை என்பது இதுதான்


Barakat Ali
ஜூலை 24, 2025 11:47

மீண்டும் பணமதிப்பிழப்பு வருமா ????


Chandrasekaran Balasubramaniam
ஜூலை 24, 2025 11:32

ஏன் இந்த லோக் ஆயுக்தா அரசியல் வியாதிகள் வீட்டுக்கு ரெய்டு போக மாட்டானுகளா. இந்த அதிகாரிகளிடத்திலே இவ்வளவு என்றால் அவனுகளிடத்தில் எவ்வளவு இருக்கும். ஏன் லோக்ஆயுக்தா அங்க ரெய்டு போவதில்லை.


கோவர்த்தன்
ஜூலை 24, 2025 09:29

தனிநபர் வருமானத்தில் கர்னாடகா முதலிடம். தமிழ்நாடு இரண்டாமிடமாம். கணக்கு போட்டு பாத்துக்கோங்க.


அப்பாவி
ஜூலை 24, 2025 09:27

இவிங்க எல்லாம் ஒன்றிய அரசுத் தேர்வில் படிச்சு பாஸ்பண்ணி வேலைக்கு சேர்ந்த சொக்கத் தங்கங்கள்.


Venkatesan
ஜூலை 24, 2025 11:13

உங்கவீட்டுல தண்ணீர் வரலேன்னா ஒன்றிய அரசு தான் காரணம்ன்னு சொல்லும் நவீன டும்பாஸ் நீங்க தான் பாஸ்.


Mohan
ஜூலை 24, 2025 17:30

இப்படியே சொல்லி சொல்லி வாங்கி சுரண்டி தென்னுக .அடுத்தவனை குறை சொல்லி பொழப்பு நடத்துற கூட்டம் இது.


வாய்மையே வெல்லும்
ஜூலை 24, 2025 09:06

அதுசரி . இந்த லோக் ஆயுக்த கர்நாடக காங்கிரஸ் திருடர்கள் அரசியல் வியாதிகள் வீட்டுக்கு போகவே மாட்டார்களா. ? அவர்களிடம் இல்லாத பணமா ? அரசு இயந்திரங்களே .... உங்கவீரம் எல்லாம் சராசரி மக்களிடமே ..


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 24, 2025 08:37

தனிநபர் வருமானத்தில் கர்நாடக முதலிடம் தமிழகம் இரண்டாம் இடம்.


சமீபத்திய செய்தி