உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சான்றிதழில் பெயர் மாற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம்: பெண் தாசில்தார் கைது

சான்றிதழில் பெயர் மாற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம்: பெண் தாசில்தார் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: கரூர் மாவட்டம், கடவூர் அருகே பிறப்பு சான்றிதழில், பெயர் மாற்றம் செய்வதற்காக, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம், திங்களூரை சேர்ந்த வேல்முருகன் மனைவி ரேவதி, விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் பவித்ரா, ஈரோட்டில் உள்ள கல்லுாரியில் படிக்கிறார். பவித்ராவின் பிறப்பு சான்றிதழில், பவித்ரா என்பதற்கு பதிலாக பௌத்ரா என்று இருந்துள்ளது. கடவூர் தாசில்தார் அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்வதற்காக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தார்.இந்நிலையில், நேற்று கடவூர் தாசில்தார் சவுந்தரவல்லியை சந்தித்த ரேவதி, மகளின் பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பம் அளித்தார்.அதை பெற்றுக் கொண்ட தாசில்தார் சவுந்தரவல்லி, பெயர் மாற்றம் செய்வதற்கு, 5,000 ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ரேவதி, கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின்படி, நேற்று தாசில்தார் சவுந்தரவல்லியை சந்தித்த ரேவதி அவரிடம், 5,000 ரூபாயை லஞ்சமாக வழங்கினார். அப்போது மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Karunagaran
ஜூலை 31, 2025 18:14

காமராஜர் ஐயா அவர்கள் பின் பதவியில் சேர்ந்த அரசியல் தலைவர்கள் அதிகாரிகள் பதவியில் சேருமுன் பத்து ரூபாய் இல்லை பதவியில் சேர்ந்த பின் பொய் புள்ளி விவரங்கள் கணக்கு மூலம் தங்கள் மீது உள் நாட்டு வெளிநாட்டு முதலீடு டிரஸ்ட் சினிமா ஸ்டுடியோ டிவி ஸ்டேஷன் ஸ்டுடியோ விமானம் கப்பல்கள் கார் நிலங்கள் கம்பெனிகள் அறக்கட்டளைகள் நிறுவனங்கள் அனைத்தும் மத்திய விஜிலென்ஸ் ஈடி துறைகள் இராணுவம் மூலம் பறிமுதல் செய்து குடும்ப அட்டை வீதம் ஒரு கோடி ரூபாய் மற்றும் வீட்டு வரி மின்சாரம் குடிநீர் பஸ் பயணம் மளிகை சாமான் நெட் பேக்கிங் 10 ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் பதவிக்கு முன் பின் வித்தியாசம் கண்டுபிடிக்க வேண்டும்


Srinivasan A
ஜூலை 29, 2025 13:35

அரசு சான்ரறு தவறாக. இருப்பின் சம்பந்தபட்ட துறை சரி செய்து தர வேண்டும். விண்ணப்பங்கள் தபால் மூலம் பெறப்படல் வேண்டும்.


Padmasridharan
ஜூலை 26, 2025 09:45

"லஞ்சம் தர விரும்பாத " இவர்"... போலீசாரிடம் இது குறித்து தெரிவித்தார்" சாமியோவ், என்ன சொல்ல வர்றிங்க லஞ்சத்தை விரும்பி தரனும்னா. மொதல்ல இந்த சொற்களை மாற்றுங்கள். இந்த செய்திகளின் கீழ் புகார் எண்களை வெளியிடவும். தற்கொலை சம்மந்தப்பட்ட செய்திகளுக்கு கீழ் ஸ்னேஹா எண்களை கொடுப்பது மாதிரி


Raja Mohamud
ஜூலை 24, 2025 17:08

வேலை கொக்டுக்க


Sathya Gold
ஜூலை 24, 2025 15:57

இவர்களை இது போன்று அனைத்து பத்திரிகைகளிலும் எழுதி இவர்களது முழு விபரத்துடன் சொந்த ஊர், குடும்ப உறுப்பினர்... தெரியப்படுத்த வேண்டும்... கொஞ்சம் கொஞ்சமாக லஞ்சம் ஒழியும்


Ganesun Iyer
ஜூலை 24, 2025 13:46

லஞ்சம் வாங்குவதில் நாங்கள் ஆண்களைவிட குறைந்தவர்கள் இல்லை ...


Marimuthu Kaliyamoorthy
ஜூலை 24, 2025 19:55

hang


ramesh
ஜூலை 24, 2025 12:16

லஞ்சம் வாங்குபவர்களை தண்டிக்க தனி கோர்ட் வரவேண்டும். அங்கே 3 பேர் கொண்ட அமர்வு நீதிபதிகள் விசாரித்து தண்டிக்க வேண்டும். அதில் ஒரு சாமானிய மனிதன் இடம் பெற வேண்டும். குற்றவாளி குடும்பத்தில் உள்ள சொத்துக்கள் அணைத்து அரசாங்கம் கையக படுத்த வேண்டும்


ramesh
ஜூலை 24, 2025 12:12

இப்போது லஞ்சம் வாங்குவதில் ஆண் அரசு ஊழியர்களை விட பெண் ஊழியர்கள் தான் அதிகமாக வாங்கி மாட்டி கொண்டு இருக்கிறார்கள்


sivakumar Thappali Krishnamoorthy
ஜூலை 24, 2025 11:09

மனசாட்சி வேண்டும். வேலைக்கு அரசு சம்பளம் கொடுக்குது இவெங்கெலே வேலை வாங்குறதுக்கு மக்கள் இன்னும் ஒரு தண்ட செலவு செய்யணுமா? 60 வருஷ கொடுமை? ஒவ்வொரு வேலைக்கும் ஒரு மார்க்கெட் ரேட் அதுக்கும் குறைவா வாங்குன அவரு நல்லவரு? காசு கொடுத்து வேலை வாங்குறது மெத்த படிச்சவங்களும் அப்படித்தான் இருக்கிறாங்க ? கடவுள் தான் காப்பாத்தணும்


MP.K
ஜூலை 24, 2025 10:50

இவ்வாறு கையும் களவுமாக மாட்டும் அரசு அதிகாரிகளை இடைநீக்கம் செய்து பின்னர் மீண்டும் பணிக்கு வந்து விடுவார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.


முக்கிய வீடியோ