உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சபரிமலை தேங்காய் உலர் நிலையத்தில் தீ

சபரிமலை தேங்காய் உலர் நிலையத்தில் தீ

சபரிமலை : சபரிமலை சன்னிதானம் முன்புறத்தில் பெரிய நடை பந்தலுக்கு பின்பக்கம் தேங்காய் உலர் நிலையம் உள்ளது. பக்தர்கள் அடிக்கும் தேங்காய்கள் இங்கு உலர வைத்து கொப்பரைகளாக மாற்றப்பட்டு டிராக்டரில் கொண்டு செல்லப்படு கிறது.நேற்று மாலை இந்த உலர் நிலையத்திலிருந்து வெண்புகை, தீ எழுந்தது. உடனடியாக தீயணைப்புதுறையினர் முதலில் தண்ணீர் பீச்சி அடித்தும், பின்னர் நுரை உபயோகித்தும் புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆரம்பத்திலேயே தீ விபத்தை கண்டுபிடித்ததால் பாதிப்பில்லாமல் முழுமையாக தடுக்கப்பட்டதாக சன்னிதானம் தீயணைப்பு தனி அதிகாரி கே.ஆர்.அபிலாஷ் கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ