உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏரியில் தீப்பிடித்து எரிந்த விழல்கள்

ஏரியில் தீப்பிடித்து எரிந்த விழல்கள்

விழுப்புரம் : விழுப்புரம் முத்தாம்பாளையம் ஏரியில் விழல்கள் தீப்பிடித்து எரிந்தது. விழுப்புரம் அருகே பைபாஸ் சாலையோரம் முத்தாம்பாளையம் ஏரி உள்ளது. நேற்று மாலை 6:00 மணிக்கு, திடீரென ஏரியில் இருந்த விழல்கள், செடி கொடிகள் தீப்பற்றி எரிய துவங்கியது. காற்று பலமாக வீசியதால், தீ மளமளவென பரவி ஏரியின் ஒரு பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.இதனால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புகை மூட்டம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இரவு 8.00 மணி வரை தீ எரிந்து கொண்டிருந்தது. அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மர்ம நபர்களின் தீ வைப்பு காரணமாக ஏரியில் பசுமையாக இருந்த விழல்கள், செடிகள் எரிந்ததோடு, அதிலிருந்த உயிரினங்களும் பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ