உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை மக்களுக்கு புதிய அனுபவம்! முதல் புறநகர் ஏ.சி. ரயில் பயணத்துக்கு ரெடி

சென்னை மக்களுக்கு புதிய அனுபவம்! முதல் புறநகர் ஏ.சி. ரயில் பயணத்துக்கு ரெடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; சென்னையில் முதல் குளிரூட்டப்பட்ட புறநகர் மின்சார ரயில் தயாரிப்பு பணிகள் முடிந்துள்ளன. வர்த்தக நகரான மும்பையில் புறநகர் பகுதிகளுக்குச் செல்ல மின்சார ரயில்களில் குளிருட்டப்பபட்ட வசதியுடன் கூடிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த ரயில் பெட்டிகள் சென்னை ஐ.சி.எப்.,பில் தயாரிக்கப்படுகின்றன. மும்பை போன்று சென்னை ரயில்வே கோட்டத்துக்கும் நடப்பு நிதியாண்டில் குளிரூட்டப்பட்ட புறநகர் மின்சார ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஒரு ரயிலை தயாரிக்கும் பணிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி ஆலையில் தயாரிக்கப்பட்டு, அதன் முழு பணிகளும் நிறைவடைந்துள்ளன. தற்போது, ரயில்வே அதிகாரிகள் அந்த ரயிலை சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்து வருகின்றனர். சோதனை ஓட்டம் முடிந்த பின்னர், எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பதை ரயில்வே வாரியம் முடிவு செய்து அறிவிக்கும். அதன் பின்னர் அந்த வழித்தடத்தில் ரயில் இயங்கும் நடவடிக்கைகள் தொடங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

கிஜன்
ஜன 18, 2025 10:47

இது MEMU ரயிலாக இருப்பின் ....சென்னையிலிருந்து புதுச்சேரி அல்லது திருச்சி வரை இயக்கலாம் .... EMU எனில் செங்கல்பட்டு முதல் கும்மிடிப்பூண்டி வரை இயக்குவது நல்லது .... ஜன்னல் உள்ள ரயிலிலேயே குடித்துவிட்டு ஏறி விடுகிறார்கள் ....கிட்டேயே நிற்கமுடிவதில்லை .... ஏ.சி எப்படியோ .... சுகந்த மணத்தில் இன்பமான பயணமாக இருக்கப்போகிறது ....


M. PALANIAPPAN
ஜன 18, 2025 10:05

குளிரூட்ட பட்ட முதல் புற நகர் ரயில் சென்னைக்கு ஒரு மகுடம்


sundarsvpr
ஜன 18, 2025 08:53

-எல்லா தயாரிப்புகளும் சென்னை மதுரை போன்ற நகரங்களில் மட்டும் உபயோகம் என்று இருக்கக்கூடாது. ஏழை எளிய மக்களும் வரி கொடுக்கிறார்கள் என்பதனை அரசுகள் கருத்தில்கொள்ளவேண்டும். அதே சமயத்தில் கிராமிய தன்மை மறைந்துவிடக்கூடாது


தத்வமசி
ஜன 18, 2025 10:28

இரண்டு கிராமங்களை உங்களின் தேர்வாக கூறுங்கள். அந்த இரண்டு கிராமங்களுக்கு இடையே இந்த ஏசி ரயில்களை இயக்கலாம் நண்பரே.


Ray
ஜன 18, 2025 12:25

SUBURBAN என்பதன் அர்த்தமென்ன? அடுத்து முன்பதிவில்லா ரயில்களில் கூட கட்டணம் அதிகம் என்று கிராமத்தினர் பேருந்துகளை தேர்வு செய்கின்றனர். இதில் குளிரூட்டப்பட்ட ரயில் கட்டணம் அவர்களுக்கு கட்டுப்படியாக வேண்டும். மறுபக்கம் சென்னையிலேயே சுபர்பன் ரயில்களை குறைந்த கட்டணத்தில் இயக்க ரயில்வேக்கு கட்டுப்படியாகவில்லை யென்றுதான் அடிக்கடி என்னன்னவோ சாக்குபோக்கு சொல்லி ரத்து செய்கிறார்கள். வேளச்சேரி பீச் ரயிலை சிந்தாதிரிபேட்டையுடன் நிறுத்தினார்கள். இந்த நிலையில் சென்னையில் AC சுபர்பன் ரயில்கள் போணியாகுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். முதலில் வேளச்சேரி பீச் லைனில் இயக்கி சோதிக்கலாம்.


Kasimani Baskaran
ஜன 18, 2025 08:06

கதவுடன் கூடிய மின்சார புறநகர் ரயில் அற்புதம். ஆனால் காற்றோட்டமாக இல்லாமல் இருக்கும் பொழுது சுத்தம் / சுகாதாரமில்லாதவர்கள் உள்ளே இருந்தால் நாற்றம் மற்றும் நோய் தொற்று மோசமாக இருக்கும்.


முக்கிய வீடியோ