உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விசைப்படகு மோதி பரிசல் கவிழ்ந்தது நீச்சல் அடித்து உயிர் தப்பிய மீனவர்கள்

விசைப்படகு மோதி பரிசல் கவிழ்ந்தது நீச்சல் அடித்து உயிர் தப்பிய மீனவர்கள்

இடைப்பாடி: சேலம் மாவட்டம் பூலாம்பட்டி – ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டையை இணைக்கும்படி, காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை உள்ளது. பூலாம்பட்டி, நெருஞ்சிப்பேட்டை டவுன் பஞ்சாயத்துகள் மூலம் ஒப்பந்தம் விடப்பட்டு, இரு மாவட்டங்கள் இடையே விசைப்படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது. இன்று (நவ.,28) நெருஞ்சிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து மூலம் இயக்கப்படும் விசைப்படகை, நெருஞ்சிப்பேட்டையை சேர்ந்த, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி அருண்குமார், 22, ஓட்டி வந்துள்ளார். அவருக்கு உதவியாக, பிளஸ் 2 மாணவர் வந்துள்ளார். மதியம், 2:30 மணிக்கு பூலாம்பட்டி காவிரி ஆற்றின் கரை அருகே வந்தபோது, அங்கு ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பரிசல் மீது மோதியது. தொடர்ந்து பரிசல் கவிழ்ந்தது. அதில் இருந்த மீனவர்களான, பூலாம்பட்டியை சேர்ந்த தங்கராஜ், 62, உமாசங்கர், 53, நீச்சல் அடித்து கரையேறி உயிர் தப்பினர். இருப்பினும் மூச்சுத்திணறல் ஏற்பட்ட உமாசங்கர், இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பூலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !