மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
10 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
10 hour(s) ago
ராமநாதபுரம் : ''மீனவர்கள் பிரச்னை குறித்து லோக்சபாவில் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளோம்,'' என பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.
ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: தமிழர்கள் மீது இலங்கை தொடர் தாக்குதல் நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது. இலங்கை அரசு திமிர் போக்கை கடை பிடித்து வருவது நல்லதல்ல. இனியாவது தமிழர் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை அவசர நடவடிக்கையாக செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள 75 ஆயிரம் இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப விரும்புகின்றனர். இவர்கள் சம்பாதித்த பொருட்களை கொண்டு செல்ல தனி கப்பல் ஏற்பாடு செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோத்தபய ராஜபக்ஷேவின் அநாகரிகமான பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னை குறித்து லோக்சபாவில் பிரச்னையை பா.ஜ., எழுப்ப திட்டமிட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கச்சத்தீவில் மீன்பிடி உரிமையை பெற்றுத் தர போராடுவோம். அன்னாஹசாரேவிற்கு பின்புலமாக பா.ஜ., நிற்கும். பிரதமரே கடுமையான லோக்பால் மசோதா வேண்டும் என்று கூறுகிறார். தற்போதைய லோக்பால், பல் இல்லாத லோக்பால், என்றார்.
9 hour(s) ago | 1
10 hour(s) ago
10 hour(s) ago