உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொடி கம்பங்கள் விவகாரம் தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

கொடி கம்பங்கள் விவகாரம் தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

மதுரை:மார்க்சிஸ்ட் கொடிக் கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தடை கோரிய வழக்கை, தனி நீதிபதி தள்ளுபடி செய்ததை எதிர்த்து தாக்கலான மேல்முறையீட்டு மனுவை, கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தது.அரசியல் கட்சிகள் கொடிக்கம்பம் தொடர்பான ஒரு வழக்கில், ஜன., 27ல் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில், 'தேசிய, மாநில நெடுஞ்சாலைத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசின் இதர துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக் கம்பங்களை, 12 வாரங்களில் அகற்ற வேண்டும்' என உத்தரவிட்டார். இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் மாநில செயலர் சண்முகம் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் பிறப்பித்த உத்தரவு:சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்காமல், அவர்களின் தரப்பு கருத்துகளை கோராமல் தனி நீதிபதி இளந்திரையன் பொதுவாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இது, இயற்கை நீதிக்கு புறம்பானது. அவரது உத்தரவை எதிர்த்து தாக்கலான வழக்கை, இரு நீதிபதிகள் அமர்வு ஏற்கனவே தள்ளுபடி செய்தது. இவ்வழக்கை கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரிக்க முடிவெடுக்கும் வகையில், தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறோம்.இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை