உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடல் கடந்தும் கலக்கும் ஜல்லிக்கட்டு: மலேசியாவில் முதல்முறையாக நடத்த ஏற்பாடு

கடல் கடந்தும் கலக்கும் ஜல்லிக்கட்டு: மலேசியாவில் முதல்முறையாக நடத்த ஏற்பாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: வரலாற்றில் முதல்முறையாக மலேசியாவில் இம்முறை ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அந்நாட்டு எம்பி சரவணன் முருகன் கூறி உள்ளார். தமிழகத்தின் பாரம்பரியமான ஏறுதழுவுதல் எனப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகளவில் பிரசித்தம். ஆண்டுதோறும் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதன் பின்னரே பொங்கல் திருநாளில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். இந்த போட்டிகளைக் காண வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். தமிழகத்தில் பெரும் பெயர் பெற்ற இந்த போட்டிகள் அண்மையில் முதல்முறையாக இலங்கை திரிகோணமலை சம்பூரில் நடைபெற்றது. இப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வண்ணம், வரலாற்றில் முதல் முறையாக மலேசியாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தொடங்கி இருப்பதாக அந்நாட்டு எம்பி சரவணன் முருகன் கூறி உள்ளார். திருச்சியில் அதற்கான ஆய்வுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் இந்த தகவலை தெரிவித்தார். எம்பி சரவணன் முருகன் மேலும் கூறியதாவது; தமிழகத்தில் மட்டுமே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இலங்கையில் நடந்தது. அதன் வெற்றியைக் கண்ட பின்னர், மலேசியாவிலும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடிவு செய்திருக்கிறோம். மலேசியாவில் அதிக இந்தியர்கள் வசிக்கின்றனர். அனைவரும் கலந்து கொள்ளக் கூடிய வகையில் போட்டிக்கான இடத்தை தேர்வு செய்வதில் சிறிதுகாலம் பிடித்தது. இப்போது போட்டிக்கான இடத்தை கண்டுபிடித்துவிட்டோம். நவம்பரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். வரலாற்றில் முதல் முறையாக மலேசியாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.இவ்வாறு மலேசிய எம்பி சரவணன் முருகன் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
ஆக 26, 2025 13:16

கண்டவன் ஃபாரின் போறான். இப்போ மாடுகளும்.


Kalidass Karuppiah
ஆக 26, 2025 08:21

மிக்க மகிழ்ச்சி ஐயா வாழ்த்துகள்.. அதே சமயம் அங்கு பணிபுரியவரும் தமிழகத்தை சேர்ந்த தமிழர்களை சற்று மரியாதையுடன் நடத்துவதற்கு மலேஷியா தமிழர்களுக்கு அறிவுறுத்துங்கள் ஐயா... தமிழர்கள் உலகெங்கும் பரவி வாழ்ந்தாலும் நமது வேர் தமிழ்நாடுதான் என்பதை மலேஷியா வாழ் தமிழர்களுக்கு அவ்வப்போது நினைவுபடுத்துங்கள்...


பிரேம்ஜி
ஆக 26, 2025 08:13

தமிழன் தன் வீரத்தை மாட்டுக் கிட்ட மட்டும் தான் காட்டுவான்! தப்பான தலைவர்களை தட்டிக் கேட்க மாட்டான்!


Pooirulvilva tharshini
ஆக 26, 2025 07:27

தமிழனின் வரலாறு எங்கும் பரவட்டும் தமிழ் வாழ்க வாழ்க தமிழ் வாழ்க


முக்கிய வீடியோ