உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழவேற்காட்டில் பறவைகள் இறப்பு; வனத்துறை அதிகாரிகள் விசாரணை:

பழவேற்காட்டில் பறவைகள் இறப்பு; வனத்துறை அதிகாரிகள் விசாரணை:

சென்னை:பழவேற்காடு சரணாலய பகுதியில் தொடர்ந்து பறவைகள் இறப்பு குறித்து, வனத்துறை மற்றும் கால்நடை துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு சரணாலய பகுதியில், பூநாரை, வர்ண நாரை, கூழைக்கடா, கடல்பொந்தா, ஊசிவால் வாத்து, உல்லான் என, 126 வகையான பறவைஇனங்கள் உள்ளன.இந்நிலையில், கடந்த சில தினங்களாக அண்ணாமலைச்சேரியில் இருந்து, 2 கி.மீ., தொலைவில் ஏரியின் மையப்பகுதியில், உல்லான், ஊசிவால் வாத்து, நாரை உள்ளிட்ட பறவைகள் கொத்து கொத்தாக செத்து மடிந்தன. இறந்து அழுகிய நிலையில் பறவைகளின் உடல்கள் சிதிறி கிடக்கின்றன.பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் வனத்துறை அலுவலர்கள் அங்கு முகாமிட்டு, பைனாகுலர் உதவியுடன் கண்காணித்து, இறந்து கிடக்கும் பறவைகளை சேகரித்துவருகின்றனர்.கால்நடை மருத்துவ குழுவினர் இறந்த பறவைகளை ஆய்விற்கு உட்படுத்தி வருகின்றனர்.ஏரியில் ரசாயன கழிவுகள் ஏதும் கலந்து பறவைகள் இறந்ததா? பருவநிலை மாற்றத்தால் இறக்கின்றனவா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வறிக்கை வந்த பிறகே, பறவைகள் இறப்பு குறித்து முழுமையான விபரம் தெரியவரும் என, வனத்துறையினர் கூறுகின்றனர்.பறவைகள் திடீரென கொத்து கொத்தாக இறந்து வருவது அண்ணாமலைச்சேரி கிராம மக்களிடையே பெரும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.இது குறித்து அப்பகுதி மீனவர் குழந்தைவேலு தெரிவித்ததாவது:அண்ணாமலைச்சேரி ஏரிப்பகுதியில் தான் அதிகளவில் பறவைகள் இருக்கும்.பறவைகள் இறப்பதுகவலையை ஏற்படுத்தி உள்ளது. ஏரியின் அடுத்த கரைப்பகுதியான ஆந்திர எல்லையிலும் பறவைகள் இறந்திருக்கலாம். வனத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Arachi
பிப் 17, 2024 17:54

வலசை வரும் பறவைகள் குளிர் காலத்தை தவிர்க்கவும், உணவுக்காகவும் மற்றும் இனப் பெருக்கத்திற்காகவும் பல வெளி நாடுகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான மைல்கள் பறந்து வருகின்றன. அவை விரும்பி வரும் ஒரு இடம் பழவேற்காடு நீர் நிலைகள். தனது தன்னலத்திற்காக எந்த நீராதரம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று நீர் சூழலையும் இரக்கமின்றி கெடுத்துவிடுகிறான் இந்த நீர் சீர்கேடு அடைந்திருக்கென்று அந்தப் பறவைகளுக்கு எப்படி தெரியும். அப்பாவி பறவைகள் மனிதன் செய்யும் தவறுக்கு பலிகடாகின்றன. எவ்வகையான விஷப் பொருள் கலந்திருக்கும் எவ்வாறு கலந்திருக்கும் அருகாமையில் இருக்கும் ஆலைகள் என்ன, சிறுதொழில் புரிவோர் உதாரணமாக சாயப்பட்டறை வைத்திருப்போர் அவ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட விஷக்கழிவு கலந்து இருக்குமா என்பதை ஆராய்ந்து குற்றவாளிகளைக் கண்டறிந்து கடுமையான தண்டனை அளிக்கவேண்டும். இப்பூலகில் எல்லா உயிரிகளைவிட அதிகம் சூழ்நிலை சீர்கேட்டை செய்வது மனித இனமே. மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். இத்தனை உயிர்கள் இறப்பதற்கு காரணமாக இருந்தவர்களுக்கு இறந்த அப்பாவி பறவைகளின் ஆத்மாக்கள் தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை