உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்யாத தவறுக்கு மன்னிப்பா: முடியாது என்கிறார் கமல்

செய்யாத தவறுக்கு மன்னிப்பா: முடியாது என்கிறார் கமல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' தவறு செய்து இருந்தால் மன்னிப்பு கேட்பேன். தவறு செய்யவில்லை என்றால் மன்னிப்பு கேட்க மாட்டேன்,'' என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல் கூறியுள்ளார்.'தக்லைப்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமல், ' தமிழ் மொழியில் இருந்து தான் கன்னடம் பிறந்தது ' என்றார். இதற்கு கன்னடத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என அம்மாநில அமைச்சர்கள், கன்னட அமைப்பினர் வலியுறுத்தினர். ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கமல் கூறி வந்தார். மன்னிப்பு கேட்காவிட்டால், படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r7y11l1q&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், ராஜ்யசபா எம்.பி., பதவிக்கான தேர்தலில் கமல் போட்டியிட உள்ளார். இதனையடுத்து அவர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.பிறகு கமல் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியா ஜனநாயக நாடு. சட்டம் மற்றும் நீதி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. மறைமுக அஜன்டா உள்ளவர்களை தவிர மற்றவர்கள் யாரும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா மீதான எனது அன்பை யாராலும் சந்தேகப்பட முடியாது. கடந்த காலத்திலும் எனக்கு மிரட்டல்கள் வந்துள்ளன. நான் தவறு செய்து இருந்தால் மன்னிப்பு கேட்பேன். தவறு செய்யவில்லை என்றால் மன்னிப்பு கேட்க மாட்டேன். இது தான் எனது வாழ்க்கை முறை. இதில் மாற்றம் என்பது கிடையாது. நாட்டுக்கு தேவை என்பதால், தி.மு.க., உடன் கூட்டணி அமைத்து உள்ளோம். இவ்வாறு கமல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 69 )

Narayanan
ஜூன் 06, 2025 16:22

சாதாரணமாகவே திமிர் கூடுதல் . இப்போ திமுகவின் நிழல்வேறு கிடைத்திருக்கு கேட்கணுமா எம்பி ஆகப்போகும் திமிரும் கூடி போச்சு . கடைசி காலம் நடக்கட்டும் .


SVR
மே 31, 2025 22:59

ஒய் உன்ன யாரு செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்க சொன்னது? இப்ப செஞ்சியே ஒண்ணு அதாவது தமிழிலிருந்து பிறந்தது கன்னட மொழி அப்படீன்னு ஆங்கிலத்தில் உன்னோட புலமையை காமிச்சியே அது ஒரு மாபெரும் தவறு. ஒனக்கு ஒண்ணு தெரியுமா? தெற்கிலுள்ள திராவிட மொழிகள் எல்லாமே கர்நாடகத்தில் உள்ள இன்றைய பாதாமி முந்தைய வாதாபி என்கிற இடத்தில் இருந்து தோன்றியது என்பதற்கு இந்திய அரசின் தொல் பொருள் ஆய்வகத்தின் கல்வெட்டு துறை அலுவலகம் மைசூரில் உள்ளது. அதில் போய் என்ன இருக்குன்னு படி. ஏன்னா அந்த அலுவலகம் வெளியிடற தகவலை வைத்துத்தான் வரலாறு எழுதுபவர்கள். அதனால சோர்சுக்கு போய் பாரு. அப்போதான் என்னன்னு புரியும். இதெல்லாம் படிச்சவனுக்கு புரியும். நீ தான் இதெல்லாம் படிச்சவன் இல்லையே. அப்புறம் ஏன் இதுக்குள்ளே அநாவசியமா ஒன்னோட புலமைய காமிக்கறே? அதென்ன அன்பா சொன்னேன்னுட்டு? நீயெல்லாம் ஒரு ஆளு? இதுக்கு நடுவிலே நீ ராஜ்ய சபாவுக்கு போறியாமே? இந்த தமிழ் நாட்டு செம்மறியாடுகளுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். நீ பேசறது ஒனக்கே புரியுமா அப்படின்னு ஒரு ஐயம். அங்குள்ள பிற உறுப்பினர்கள் தொலந்தாஆர்கள். நீ அங்க போயி என்ன கிழிக்க போறேன்னு பார்ப்போம். கன்னடக்காரர்கள் போர் கொடி தூக்கியிருக்கிறார்கள். நீ மட்டும் மன்னிப்பு கேட்கலநா ஒன்னோட கன்னட பிசினஸ் அம்பேல் தான். ஓம்மேல செம காண்டா இருக்காங்க. முதல்லே சுதாரித்துகினு மன்னிப்பு கேக்குற வழிய பாரு. இல்லேன்னா சேதம் உனக்குத்தான்.


மூர்க்கன்
ஜூன் 02, 2025 14:47

கன்னட வெறியர்களுக்கு போயி பாடமெடு பரதேசி??


Raj S
ஜூன் 05, 2025 23:50

பெயருக்கு ஏத்த மாதிரி மூர்க்கத்தனமா பேசினா என்ன செய்யறது? இவர் அந்த மொழிய பத்தி பேசினார், அவங்களுக்கு கோவம் வருது... தமிழ் மொழியை பத்தி பேசினா எங்களுக்கு கோவம் வர்ற மாதிரி... உருது பத்தி பேசினா உங்களுக்கு கோவம் வருமே அப்பிடி...


GoK
மே 31, 2025 12:25

தெனாவெட்டெடுத்த தறுதலை நாகரீகம் சற்றும் அறியாதவன்


theruvasagan
மே 31, 2025 08:53

உழைக்காமல் ஓசியில பதவி சுகம் அனுபவிக்கப் பார்க்கிறதாலே வாய்க் கொழுப்பு ஓவரா ஏறி போச்சு. கன்னடர்கள் இளிச்சவாயர்கள் இல்லை. நன்றாக ஒரு பூசை போட்டு கொழுப்பை இறக்கிவிடுவார்கள். வீட்டுக்கு அடங்காதததை ஊர் அடக்கிவிடும். கன்னடக்காரன் பொங்கி எழுந்தான்னா விளைவு கடுமையாக இருக்கும். இப்போது பக்கத்தில் நிற்கிறவங்க நிச்சயம் காப்பாற்ற வரமாட்டாங்க. பம்மிக்கொண்டு நிற்பார்கள். இல்லாட்டி அங்க குவிச்சு வச்சிருக்குற சொத்துக்கள் மண்ணோட மண்ணாய் போய்விடும்.


மூர்க்கன்
ஜூன் 02, 2025 14:51

கன்னட நாய் கடிக்கும்தான் அதுக்கெல்லாம் பயப்பட முடியுமா? ஓடினாதான் விரட்டும் . திரும்ப நின்னு எதிர்த்தா அப்ப தெரியும் விரட்டி விரட்டி அடிக்க இதுதான் சரியான நேரம் .


Panchalam Soundararajan
மே 30, 2025 22:16

படம் பெயர் தக்-லைப் போக்கிரி வாழ்க்கை தமிழில் வைக்க துப்பில்லை. தமிழ் உயிராம். போக்கிரிக்கு போக்கிரித்தனம் தான் வரும். .MP தொழில் நடத்துவதற்கு முன்பு இது போன்று மாநிலங்கள் நடுவில் மொழி தகராறை உருவாக்கி தேசம் துண்டாட ட்ரைலர் போல தெரியுது.


Narayanan
ஜூன் 06, 2025 16:29

எங்கே தமிழில் பெயர் வைக்கச்சொன்னால் நம்ம பெயரை மாற்ற சொல்லிவிடுவார்களோ என்று கருதி ஸ்டாலின், ஸ்டாலின் என்பதை தமிழில் எழுதுவதுமாதிரி ஆங்கிலமாக இருந்தாலும் அதை தமிழில் எழுதுங்கள் என்று அறிவுரைசொல்லி விட்டாரே "ரெட்ஜெயின்ட் " என்று எழுதலாம் என்றும் சொல்லிவிட்டார் . தமிழைவளர்க்கும் புல்லர்கள்


Venkatesh
மே 30, 2025 21:17

காம ஹாசன் ,குருமா , பசிக்கோ , பித்தராசன் , எ1 பெருந்தோகை ,பொறை சைக்கோ என்று பல பேருக்கு போட்டி ...யார் சிறப்பாக செய்வது என்று ..கடும் போட்டி..ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல ...கேடிலும் கேடு கெட்டவன் யார் என்று ....திருட்டு மாடல் தந்தையும் செங்கல் திருடன் வாரிசும் தேர்ந்து எடுப்பார்கள்..சிறந்த எடுப்பை


Sundar R
மே 30, 2025 20:43

தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்று சொன்ன கன்னட வெறியன் ஈர வெங்காய ராமசாமிக்கு தமிழகமெங்கும் மேலிருந்து எள்ளைக் கொட்டினால் தரையில் ஒரு எள் கூட விழாத அளவுக்கு பெரிசு, பெரிசா சிலைகளை வெச்சுட்டாங்க. இப்போது தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என்று ஈர வெங்காய ராமசாமியையே திகைக்க வைக்கும் அளவுக்கு சொல்பவர்கள் மற்றும் சொல்பவர்களை ஆதரிப்பவர்கள் யார்?தேசவிரோத, பிரிவினைவாத, கிறிஸ்தவ மிஷனரி கட்சிகளான திமுக, தவெக, நாதக, விசிக, மதிமுக மற்றும் மநீம கமலஹாசன் ஆகியவை தான்.


Ganapathy
மே 30, 2025 20:34

எல்லா கன்னடர்களும் காங்கிரசுக்கு ஓட்டு போடலை. வரும் கோடையை சமாளிக்க கர்நாடக மக்களின் தயவு வேண்டும் என்ற நிலையில்தான் திராவிட கட்சிகள் நமது மாநிலத்தை வைத்துள்ளன என்பதை நம்மால் மறுக்க முடியாது. பல தமிழர்கள் கர்நாடகத்தில் வசிக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மாநிலங்களுகிடையே பகைமையை தேவையில்லாமல் மொழிப் பிரச்சனையை வச்சு கிளப்பிய இவரை தேசீய புலனாய்வு அமைப்பு விசாரிக்கணும். இவரால் நாம் அவதிப்பட முடியாது.


Ramesh Sargam
மே 30, 2025 20:27

முன்பொரு நாள் இதே திமுக கட்சியை பற்றி இந்த கமல் மிக மிக கேவலமாக பேசினார். இன்று அவர்கள் காலடியில்.


மூர்க்கன்
மே 31, 2025 03:18

நாளைக்கு நீங்கள்.. மாற்றம் ஒன்றே மாறாதது.


Raj S
மே 30, 2025 20:25

தப்பு பண்ணமா இல்லையானு தெரிஞ்சிக்கிற அளவுக்கு புத்தி இருந்தா நீங்க ஏன் இந்த திருட்டு கும்பலோட சேரப்போறீங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை