உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாத்தா ஆசையை நிறைவேற்ற தி.மு.க.,வில் இணைந்தேன் மாஜி காங்., நிர்வாகி விளக்கம்

தாத்தா ஆசையை நிறைவேற்ற தி.மு.க.,வில் இணைந்தேன் மாஜி காங்., நிர்வாகி விளக்கம்

விருதுநகர்: ''தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்றவே, காங்கிரசில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தேன்,'' என விருது நகர் கிழக்கு மாவட்ட காங்., துணைத் தலைவராக இருந்த சுரேந்திரன் தெரிவித்தார். கரூர் நகர் காங்., நிர்வாகி கவிதா, சமீபத்தில் தி.மு.க.,வில் இணைந்தார். இது தி.மு.க., - காங்., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அது அடங்குவதற்குள், விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்., துணைத் தலைவர் சுரேந்திரன், தி.மு.க.,வில் இணைந்தார். இதனால், தமிழக காங்கிரசார் அதிர்ச்சிஅடைந்தனர். கூட்டணி கட்சி நிர்வாகியை சேர்த்ததால், தி.மு.க.,வை காங்கிரஸ் மூத்த துணைத் தலைவர் பொன். கிருஷ்ணமூர்த்தி கடுமையாக விமர்சித்தார். விருதுநகரில், 4 ஆண்டுகளாக கட்சியில் பலமான கட்டமைப்பை உருவாக்கி வைத்திருந்தவர் சுரேந்திரன் எனவும் காங்கிரசார் தெரிவித்தனர். இந்நிலையில், தி.மு.க.,வில் இணைந்தது குறித்து விளக்கம் அளித்த சுரேந்திரன், “என் தாத்தா தி.மு.க.,வைச் சேர்ந்தவர். சிவஞானபுரம் கிளைச்செயலராக இருந்தார். கடந்த ஓராண்டாக என்னை தி.மு.க.,விற்கு அழைத்தார். கடந்த மாதம் 25ம் தேதி, திடுமென இறந்தார். “எனவே, என் தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக, தி.மு.க.,வில் சேர முடிவெடுத்தேன். தி.மு.க., - எம்.எல்.ஏ., சீனிவாசன் முன்னிலையில் இணைந்தேன்,'' என் றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை