உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுபான்மையினரை விட்டுக்கொடுக்க மாட்டோம்: முன்னாள் அமைச்சர் வேலுமணி உறுதி

சிறுபான்மையினரை விட்டுக்கொடுக்க மாட்டோம்: முன்னாள் அமைச்சர் வேலுமணி உறுதி

கோவை, : “கொள்கை வேறு; கூட்டணி வேறு. எந்தவொரு சூழ்நிலையிலும் சிறுபான்மையினரை விட்டுக்கொடுக்க மாட்டோம்,” என, முன்னாள் அமைச்சர் வேலுமணி உறுதியளித்தார்.அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. அதில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:கொள்கை வேறு; கூட்டணி வேறு. சிறுபான்மையின மக்களுக்கு அ.தி.மு.க., மட்டுமே உறுதுணையாக இருக்கும். எந்த சூழ்நிலையிலும் சிறுபான்மையினரை விட்டுக்கொடுக்க மாட்டோம். பா.ஜ., கூட்டணியில் தற்போது இடம் பெற்று இருந்தாலும், வக்ப் சட்டத்துக்கு எதிராக ஓட்டளித்தோம்.அ.தி.மு.க.,வுக்கு இளைஞர்கள் அதிகமாக வர வேண்டும். அப்படி வருவோருக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படும். அவர்கள் சொந்தப் பணியையும் பார்த்துக் கொண்டு, கட்சிப் பணியும் ஆற்றலாம். நிர்ப்பந்தம் எதுவும் கொடுக்க மாட்டோம். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு எதிராக எத்தனை கூட்டணி அமைந்தாலும், இனி எங்களை வீழ்த்த முடியாது. முதல்வரான பின் பழனிசாமி மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து, தமிழகத்துக்கு தேவையான நிதியை பெற்றுத்தருவார். அப்போது, பழனிசாமியின் அருமை புரியும்.இவ்வாறு அவர் பேசினார்.புல் அவுட்:கொலை மிரட்டல்நடவடிக்கை வேண்டும்கோவை மாநகராட்சியில் எந்த பணியும் செய்யாமலேயே, வரிகளை மட்டும் உயர்த்தி உள்ளனர். குடிநீர் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இல்லையென்றால், அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் சிரமத்தில் உள்ளனர். முதல்வராக பழனிசாமி வந்தால் தான், மாற்றம் கிடைக்குமென அவர்கள் கூறுகின்றனர். எனக்கு வந்த கொலை மிரட்டல் கடிதத்தை சீரியஸாகவும் எடுத்துக் கொள்ளவில்லை; புறக்கணிக்கவும் இல்லை. ஆனால், இப்படி யாருக்கு கடிதம் வந்தாலும், அதை தீவிரமாக விசாரிக்க வேண்டும். வேலுமணி, முன்னாள் அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை