அறக்கட்டளை சொற்பொழிவு
மதுரை: மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் ராமசாமிநாயக்கர் - யசோதையம்மாள் அறக்கட்டளை சொற்பொழிவு நடந்தது. கல்லூரி உதவி செயலாளர் ராஜேந்திர பாபு தலைமை வகித்தார். முதல்வர் நேரு, இயக்குனர் ராஜாகோவிந்தசாமி முன்னிலை வகித்தனர். முன்னாள் காங்., தலைவர் குமரிஅனந்தனர் பேசுகையில், ''மாணவர்கள் தேசபக்தியுடன் திகழவேண்டும். தன்னலம் கருதாமல் விடுதலைக்கு உழைத்த வீரர்கள் பற்றி தெரிந்து கொண்டு அவர்கள் வழி நடக்க வேண்டும்'', என்றார். பேராசிரியர் நம்சீனிவாசன் நன்றி கூறினார்.