உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆன்லைன் வாயிலாக மோசடி: 3 பேர் கைது; ரூ.2.23 கோடி மீட்பு

ஆன்லைன் வாயிலாக மோசடி: 3 பேர் கைது; ரூ.2.23 கோடி மீட்பு

சென்னை: வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்தியதாக, 'பெடெக்ஸ் கூரியர்' நிறுவனத்தில் இருந்து பேசுவதாக மிரட்டி, ஆன்லைன் வாயிலாக கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த குஜராத்தை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2.23 கோடி ரூபாய் மீட்கப்பட்டு உள்ளது.சென்னையை சேர்ந்த ஒருவரின் மொபைல் போனுக்கு, பெடெக்ஸ் கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறிய மர்ம நபர்கள், 'நீங்கள் வெளிநாட்டிற்கு போதை பொருள் கடத்தி உள்ளீர்கள். உங்களை கைது செய்யாமல் இருக்க, 1.18 கோடி ரூபாய் அனுப்ப வேண்டும்' என்று, ஆன்லைன் வாயிலாக மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து, மாநில சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, குஜராத்தை சேர்ந்த ரமேஷ் பாய் படாபி போக்ரா 48; பிரேஷ்பாய், 42; விவேக் தாமாஜிபாய், 42 ஆகியோரை நேற்று கைது செய்தனர்.அதேபோல, டிராய் எனப்படும் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து பேசுவதாகவும், 'நீங்கள் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளீர்கள். சி.பி.ஐ., அதிகாரிகள் உங்களை தொடர்பு கொள்வர்' என்று கூறியும், மற்றொரு நபரிடம் கோடிக்கணக்கான ரூபாய் பறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும், மாநில சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த இரண்டு வழக்குகளிலும், 2.23 கோடி ரூபாயை போலீசார் மீட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Arul. K
செப் 24, 2024 15:33

இவர்களிடம் கோடியில் கேட்டாலும் கொடுப்பார்கள் என்று அவர்களுக்கு எப்படி தெரியும்


வாய்மையே வெல்லும்
செப் 24, 2024 14:06

பஞ்சத்தில் அடிபட்டு நூறுநாள் சாப்பிடாமல் இருந்த ஆளை போல இல்லாம அடுத்த நூறு நாட்களுக்கு சேர்ந்தே சாப்பிட்டு உள்ள கொழுப்பெடுத்த குந்தாணியை கைகாலை உடைத்தாலேயொழியே திருந்தமாட்டான் காவாலி பய


Ramesh Sargam
செப் 24, 2024 13:07

இதுபோன்ற குற்றம் செய்பவர்களுக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை கொடுப்பதில்லை. சிறிது காலம் சிறை வாசம். அவ்வளவுதான் தண்டனை. அதை முடித்துவிட்டு மீண்டும் இதே குற்றங்களை தொடர்ந்து செய்வார்கள் குற்றவாளிகள். தண்டனைகள் மிக மிக கடுமையாக இருக்கவேண்டும்.


k Venkatesan
செப் 24, 2024 11:19

பணத்தை இழந்தவர்கள் ஏதோவொரு குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் மட்டுமே சைபர் குற்றவாளிகளுக்கு ஆன்லைன் மூலமாக பணம் கொடுதிருப்பர் . எனவே அவர்களையும் தீர விசாரிக்க வேண்டும்.


Keshavan.J
செப் 24, 2024 14:12

Yes Mr. Venkatesan even my point of view also the same. They might have involved in some crime before.


சமீபத்திய செய்தி