மேலும் செய்திகள்
வங்கியில் கடன்: மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்ப்பு
06-Oct-2025
சென்னை : மலைப் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி மற்றும் அவருக்கு துணையாக ஒருவர், இலவசமாக பஸ்சில் பயணிக்க அனுமதி அளித்து, அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின் படி, 21 வகை மாற்றுத் திறனாளிகளில், 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிப்புடையவர்கள் மற்றும் அவருடன் பயணிக்கும் துணையாளர் ஒருவர், அரசு போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் சாதரண பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். இந்நிலையில், சுதந்திர தின உரையில் முதல்வர் அறிவித்தபடி, மலைப் பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில், அரசின் இலவச பஸ் பயணத் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, முழுமையான மலைப் பகுதி மற்றும் பகுதி மலைப் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் பயணிக்கும் துணையாளர் ஒருவர், 35 கி.மீ., வரை பஸ்சில் இலவசமாக பயணிக்கலாம். இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு, 88.65 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப் பட்டுள்ளது.
06-Oct-2025