உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலவச வேட்டி, சேலை தயாரிப்பு இன்னும் முழுமை பெறவில்லை

இலவச வேட்டி, சேலை தயாரிப்பு இன்னும் முழுமை பெறவில்லை

சென்னை:'பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்க, இன்னும் பணிகள் நிறைவடையவில்லை. வரும் 31ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்படும்' என, கைத்தறித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு, இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், 1.77 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு, இலவச வேட்டி, சேலை வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. வேட்டி, சேலை தயாரிக்கும் பணி கடந்த செப்டம்பரில் துவக்கப்பட்டது. தற்போது வரை பணி நடந்து வருகிறது.பொங்கலுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில், வேட்டி, சேலை தயாரிப்பு பணி இன்னும் நிறைவு பெறவில்லை. தற்போது வரை, 1.67 கோடி வேட்டிகள், 1.40 கோடி சேலைகள் தயாரிக்கப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இன்னும், 10 லட்சம் வேட்டிகள், 30 லட்சம் சேலைகள் தயாரிக்க வேண்டிஉள்ளது.இதுகுறித்து, கைத்தறி துறை அதிகாரிகள் கூறுகையில், 'இன்னும், 10 லட்சம் வேட்டி, 30 லட்சம் சேலைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் பணி முடிக்கப்பட்டு, அனைவருக்கும் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை