உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பஸ்களில் புதிய சலுகை; கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு

மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பஸ்களில் புதிய சலுகை; கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு

சென்னை; மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்கள் சுமைகளை நகர மற்றும் புறநகர் அரசு பஸ்களில் கட்டணமின்றி எடுத்துச் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மகளிருக்காக கட்டணமில்லா பஸ் பயணம் உள்ளிட்ட தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாக, தற்போது மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு புதிய சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பஸ்களில் மகளிர் சுய உதவிக்குழுவினர் கட்டணமில்லாமல் பயணித்தாலும் அவர்கள் கொண்டு செல்கிற சுமைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந் நிலையில் தற்போது சுமைகளுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பஸ்களில் 100 கி.மீ. வரை 25 கிலோ வரையிலான பொருட்களை மகளிர் சுய உதவிக்குழுவினர் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம். இந்த சலுகையை பெற, சுய உதவிக்குழுவினர் அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அப்படி பயணிக்கும் போது அவர்களுக்கு கட்டணமில்லா சுமை டிக்கெட் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
மார் 11, 2025 13:05

இந்த சலுகையை பெற, சுய உதவிக்குழுவினர் அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அப்படி அடையாள அட்டை இல்லாதவர்கள், குறைந்த பட்சம் திமுகவின் கருப்பு சிவப்பு கொடியை கையில் பச்சை குத்தியிருக்கவேண்டும், அல்லது ஸ்டாலின் மற்றும் அவர் மகன் உதயநிதி போட்டோ கையில் எப்பொழுதும் வைத்திருக்கவேண்டும்.