உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்களுக்கான இலவச திட்டங்கள் கை கொடுக்காது: உளவுத்துறை அதிர்ச்சி அறிக்கை

பெண்களுக்கான இலவச திட்டங்கள் கை கொடுக்காது: உளவுத்துறை அதிர்ச்சி அறிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பெண்களுக்கான இலவச திட்டங்கள் கை கொடுக்காது என உளவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்திய இலவச பஸ் திட்டத்தால், தின மும் பல லட்சம் பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர். அதையே கிண்டலடித்து, 'எங்கே போக வேண்டுமானாலும், ஓசி பஸ்சில் போறிங்க என்று பேசிய பொன்முடிக்கு, பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=016qi1bp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பல பெண்கள், உங்க அப்பன் காசிலா நாங்கள் ஓசியில் போகிறோம்' என, சகட்டுமேனிக்கு பொன் முடியை விமர்சித்து பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவின. இதையடுத்து, கட்சிதலைமையின் கோபத்திற்கு ஆளான பொன்முடி, தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். தற்போது, பெண்களையும், ஹிந்து சமயங்களையும் மிகவும் ஆபாசமாக பொன்முடி பேசியுள்ளார். பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய், இலவச பஸ் பயணம் உள் ளிட்ட திட்டங்களை செயல்படுத்திய போதிலும், பொன்முடியின் ஆபாச பேச்சுக்களால், பெண்களின் ஆதரவை தி.மு.க., இழக்கக் கூடும் என கூறப்படுகிறது.பொன்முடிக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடை யாமல் இருக்க, அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்குவதுதான் ஒரே வழி என, ஆட்சியாளர்களுக்கு உள வுத்துறை அறிக்கை அளித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Krishna Kumar
ஏப் 14, 2025 09:15

பொன்முடியின் கட்சிப்பதவி பறிப்பு என்பது ஓர் கண் துடைப்பு நாடகம்.அமைச்சர் பதிவியில் இருந்தே நீக்கப்பட வேண்டியவர்.பொன்முடி,துரைமுருகன் மற்றும் கே.என்.நேரு போன்ற வயது முதிர்ந்தவர்களை நீக்கிவிட்டு கருத்தியலில் தெளிவுள்ள இளைஞர்களை கட்சி வரும் தேர்தலிலும் ஆட்சியை பிடிக்கும். இல்லையேல் மீண்டும் 10 வருடம் கப்பல் உட்கார வேண்டி வரும்.


அப்பாவி
ஏப் 13, 2025 19:54

எல்லோருக்கும் ஆளுக்கு 5 லட்சம் போடற மாதிரி திட்டம் கொண்டாருவோம்னு வாக்குறுதி குடுக்கலாம். அப்புறம் அது ஒரு உடான்ஸ் இல்லே ஜூம்லான்னு சமாளிக்கலாம்.


Vinoth Babu
ஏப் 13, 2025 17:24

தி மு க .இருக்கும் வரை தமிழ்நாடு உருப்படாது .


P. SRINIVASAN
ஏப் 13, 2025 16:01

கொஞ்சம் நடுநிலைமைய இங்கே.


sridhar
ஏப் 13, 2025 13:21

ரொம்ப தான் ஹிந்து பெண்கள் மேல் நம்பிக்கை வைக்கிறீர்கள். ஆயிரம் ருபாய் கொடுத்துவிட்டு அவர்கள் நம்பிக்கையை பழித்தால் சிரித்துக்கொண்டே திமுகவுக்கு வோட்டு போடுவார்கள் .


venugopal s
ஏப் 13, 2025 15:48

உங்கள் வீட்டில் உள்ள பெண்களையும் சேர்த்துத் தானே சொல்கிறீர்கள்?


Ethiraj
ஏப் 14, 2025 05:53

It will be increased to 10000 per person in 2026. Is it not misappropriation to donate public funds meant for governance. How is it possible even after 60 years of Dravidan rule poverty is 50 %


Barakat Ali
ஏப் 13, 2025 12:43

தனது குடும்பத்தலைவரை டாஸ்மாக்கிற்கு காவு கொடுத்துட்டு எந்த பெண் இலவசம் கொடுத்தாய் என்ற ஒரே காரணத்துக்காக உனக்கு ஒட்டு போடுவார்? அடேய் .... உங்க அநியாயத்துக்கு அளவே இல்லையா?


venugopal s
ஏப் 13, 2025 12:42

அடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவை விரட்டி விட்டு தமிழக மக்கள் தமிழகத்தை பாஜக என்ற சேட்டு கடையில் நிச்சயமாக அடகு வைக்க மாட்டார்கள்! அதிமுக பாஜக கூட்டணி தோல்வி உறுதி ஆகிவிட்டது!


Venkatesan Srinivasan
ஏப் 13, 2025 15:44

சேட்டு கடையில் அடமானம் வைக்க இங்கே என்ன இருக்கிறது. அடமானம் வைத்த பொருளாவது மீட்க வாய்ப்பு உள்ளது. கொள்ளை போன பொருள் எப்படி கிடைக்கும்?


Sakthivel Muthusamy
ஏப் 14, 2025 10:03

தமிழகத்தில் அடிமைகளுக்கு இங்கே வேலையில்லை அதேபோல் மதவாதிகளுக்கு அதிகாரம் கிடைக்காது


Murugesan
ஏப் 13, 2025 12:34

நாட்டை சீரழித்த அயோக்கிய குடும்பம் இவனுங்க காசை கொடுக்கிற மாதிரியான பில்டப் அதிலும் கொள்ளை, நாசமாக போவானுங்க தெலுங்குதேச திருட்டு ரயில் வந்தேறிகள்


Chinnamanibalan
ஏப் 13, 2025 12:04

தமிழக தேர்தலில் சிந்தித்து வாக்களிப்பது என்பது 45 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது உண்மை. அதன் பின்னர் ஓட்டுக்கு நோட்டு, குவார்ட்டர், கோழி பிரியாணி இவைகள்தான் தமிழகத்தின் தேர்தல் வெற்றியை நிர்ணயம் செய்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. இன்று கோடிகளை வாரிக் குவிப்போர் பற்றி மக்கள் கவலைப்படுவது இல்லை. மாறாக தங்களது ஒவ்வொரு ஓட்டுக்கும் எவ்வளவு நோட்டு போட்டுக் கொடுப்பார்கள் என்பதே வாக்காளர்களின் பெரும் கவலையாக உள்ளது! கூட்டணி கட்சிகளின் நிலையும் அதுதானே!


Rajarajan
ஏப் 13, 2025 11:12

சோற்றாலடித்த பிண்டம் தமிழன் உப்புபோட்டு சாப்பிட்டால் தான், நிலைமை மாறும். அவசரப்படாதீங்க, இதை நான் சொல்லல, திருவாளர். கருணாநிதி தான் சொன்னார். அவர் இந்த ஒருவிஷயத்தில் தீர்க்கதரிசி தான்.


முக்கிய வீடியோ