உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலவச வேட்டி, சேலை திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஊழல்: அண்ணாமலை

இலவச வேட்டி, சேலை திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஊழல்: அண்ணாமலை

சென்னை: ''பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் இலவச காட்டன் வேட்டி சேலை திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஊழல் செய்து கொண்டிருக்கிறார் அமைச்சர் கமிஷன் காந்தி ,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த ஆண்டு, உற்பத்திச் செலவில் மிகப்பெரிய அளவில் ஊழல் செய்திருப்பதை வெளிப்படுத்தினோம். 2024 ஜூலை 11ம் தேதி, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள் பா.ஜ., தலைமை அலுவலகத்தில் என்னை சந்தித்து இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விளக்கங்களை கேட்டறிந்தனர். அதிகாரிகள் கேட்டதற்கிணங்க, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட வேட்டி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்தில் ஜூலை 13ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது. தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், இந்த ஊழல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hz7pkqu7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த ஆண்டும், பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வேட்டியில், வழக்கமாகப் பயன்படுத்தி வந்த பருத்தி நூலின் அளவைக் குறைத்து விட்டு, விலை குறைவான பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தி ஊழல் செய்திருக்கிறார்கள். இதனை அடுத்து, தமிழக அரசு கைத்தறித் துறையின் இயக்குனரான, ஐஏஎஸ் அதிகாரி சண்முகசுந்தரம், தரப்பரிசோதனையில் தெரிவு செய்யப்படாத சுமார் 20 லட்சம் வேட்டிகளை, அந்தந்த கூட்டுறவு சங்கங்களுக்கே திருப்பி அனுப்பி, அதே எண்ணிக்கையில், நிர்ணயிக்கப்பட்ட தரத்திலான வேட்டிகளை, அரசு கொள்முதல் கிடங்குக்கு அனுப்பி வைக்கக் கூறி, கடந்த டிசம்பர் 3, 2024 அன்று குறிப்பாணை அனுப்பியிருக்கிறார். கூட்டுறவு சங்கங்கள் தரமான வேட்டிகளை அனுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மீண்டும், கடந்த 06ம் தேதி , நிர்ணயிக்கப்பட்ட தரத்திலான வேட்டிகளை அரசு கொள்முதல் கிடங்குக்கு அனுப்பவில்லை என்றால், இழப்பீடு நடவடிக்கை எடுப்பதோடு, எதிர்காலத்தில் இந்த சங்கங்களுக்கு உற்பத்தி திட்டம் வழங்கப்பட மாட்டாது என்பதையும் தெரிவித்திருக்கிறார். ஆனால், கூட்டுறவு சங்கங்கள் என்ற பெயரில், தனது பினாமி நிறுவனங்கள் மூலம் மக்கள் பணத்தை நூதனமாகக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் காந்தி, தான் செய்யும் ஊழலுக்கு, ஐஏஎஸ் அதிகாரி சண்முகசுந்தரம் தடையாக இருக்கிறார் என்பது தெரிந்ததும், அடுத்த இரண்டு நாட்களில், அவரை கைத்தறித் துறையில் இருந்து பணிமாற்றம் செய்திருக்கிறார்கள்.கைத்தறித் துறையில் நடக்கும் மெகா ஊழலைக், கடந்த ஆண்டே கண்டுபிடித்துக் கூறியும், முதல்வர் அவரைத் தொடர்ந்து அதே துறையில் அமைச்சராக நீடிக்கச் செய்கிறார் என்றால், அமைச்சர் செய்யும் ஊழலின் பங்கு, முதல்வருக்கும் செல்கிறது என்பதுதானே பொருள்? தனது பணியை சரியாகச் செய்து, ஊழல் நடப்பதை வெளிக்கொண்டு வந்த அரசு அதிகாரியை, இரண்டு நாட்களிலேயே பணிமாற்றம் செய்திருப்பது அதைத்தானே உறுதிப்படுத்துகிறது? இப்படி ஒரு ஆட்சி நடத்த அசிங்கமாக இல்லையா? ஒவ்வொரு ஆண்டும், ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகளில் கொள்ளையடிக்கும் அமைச்சர் காந்தி, இனியும் கைத்தறித் துறை அமைச்சராக நீடிக்கக் கூடாது. உடனடியாக, அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். வரும் 2026 ஆம் ஆண்டு, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

K.Ramakrishnan
பிப் 11, 2025 23:04

ஒவ்வொரு நாளும் யார் மீதாவது குறை கூறுகிறீர்கள். நீங்கள் சுத்த சுயம்பிரகாசர் என்றால் திருச்சி சூர்யா சிவாவும் உங்கள் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்குகிறார்.அதற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை. பொய் என்றால் அவதூறு வழக்கு போடலாமே...?


Bhaskaran
பிப் 11, 2025 05:18

மயிலாப்பூர் அபிராமபுரம் ரேஷன் கடையில் வேஷ்டி மட்டும் தந்துவிட்டு புடவையை ஆட்டையை போட்டுட்டாங்க


V வைகுண்டேஸ்வரன்
பிப் 10, 2025 22:43

இன்றைய காமெடி அண்ணா மலை. நாளை யாரு? தமிழிசையா? காடேஸ்வரா வா? தமிழ்நாடு கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் டோஸ் குடுத்து விட்டதால், அமுக்கிக்கிட்டு இருக்கார்.


K.n. Dhasarathan
பிப் 10, 2025 21:23

தினம் தினம் பொய்களை அலந்துவிடும், அண்ணாமலை, திரும்ப திரும்ப சொல்வதால் பொய்கள் உண்மை ஆகாது, ஆதாரம் இருந்தால் வழக்கு போடலாமே, ஏன் செய்யவில்லை ? இதில் இருந்தே தெரியவில்லையா ? ஒரு சம்பவம் கூறுகிறேன், இந்த அண்ணாமலை, முதலில் நமது முதல்வர் முதன்முதலாக வெளிநாடு சென்று முதலீடுகளை தமிழ்நாட்டிற்க்காக கொண்டு வந்தார், அப்போது ஐயோ முதல்வர் வெளிநாட்டில் சொந்த பணத்தை எல்லாம் முதலீடு செய்து வந்தார் பல ஆயிரம் கோடிகள் என்று குற்றம் சொன்னார், அப்போது ஆதாரம் இருந்தால் கோர்ட்டில் கொடுங்கள் இல்லையெனில் உங்கள் மீது நான் வழக்கு போடுவேன் என்று முதல்வர் சொன்னதும் அப்படியே அடங்கி விட்டார்,அப்புறம் ஏன் வாயை திறக்கவில்லை ? பொய்கள்தானே இது நடந்ததா, இல்லையா ?


m.n.balasubramani
பிப் 10, 2025 20:21

எத்தனை பேர் இந்த திட்டத்தில் கோடி குவித்துள்ளார் என பட்டியல் உள்ளது , இரண்டு லொள் லொள் ஆட்சியிலும் ,


Ramesh Sargam
பிப் 10, 2025 20:15

அண்ணாமலை அவர்களே, திமுக ஆட்சியில் ஊழலே நடைபெறாத திட்டம் ஏதாவது ஒன்று இருந்தால் கூறுங்களேன்.. தினம் தினம் ஊழல் திட்டங்கள் அறிந்து மனம் வேதனை அடைகிறது. மனசாந்திக்காக ஒரே ஒரு ஊழல் இல்லாத திட்டம் இருந்தால் கூறுங்களேன்.


M Ramachandran
பிப் 10, 2025 19:30

ஊழல் என்றால் ஒரு திருட்டு குடும்பம். திருட்டு குடும்ப கட்சி தலமை தீ மு க்க. தீ மு க்கா என்றால் ஊழல். ஊழல் என்றால் தீ மு க்க குடும்பம். இது மத்திய உளவு துறை அறிந்த நாடறிந்த உண்மை. திரும்ப திரும்ப ஊழல் என்றால் காது புளித்து விட்டதிய்யா.


sridhar
பிப் 10, 2025 19:05

கருணாநிதி என்று பெயர் இருக்கவேண்டும், பாவம் காந்தி.


venugopal s
பிப் 10, 2025 18:45

அண்ணாமலைக்கு தினமும் ஏதாவது உளறவில்லை என்றால் தூக்கமே வராதோ?


ஆனந்த வடிவேல் சே
பிப் 10, 2025 18:14

மக்கள் விழிப்புச் அடைய வேண்டும் கைரேகை வைத்து பொருட்கள் வாங்கும் போது கூட ரேஷன் கடை ஊழியர்கள் ஏமாற்றுகின்றனர் மக்கள் தான் விழிப்பு அடைய வேண்டும்


சமீபத்திய செய்தி