உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில்வே செயலியில் அடிக்கடி பிரச்னை பயணியர் தவிப்பு

ரயில்வே செயலியில் அடிக்கடி பிரச்னை பயணியர் தவிப்பு

சென்னை:என்.டி.இ.எஸ்., ரயில்வே செயலியில் அடிக்கடி பிரச்னை ஏற் படுவதால், உண்மையான தகவல் பெற முடியாமல் பயணியர் அவதிப் படுகின்றனர். ரயில்களின் இயக்கம் உட்பட பல்வேறு சேவை குறித்து அறிந்து கொள்ள, 'நேஷனல் ட்ரெயின் என்கொயரி சிஸ்டம்' என்ற செயலி, ரயில்வே பயன்பாட்டில் உள்ளது. இதில், நாடு முழுதும் ரயில்களின் வருகை, புறப் படும் நேரம், வழித்தடம், ரயில்கள் வரும் நடைமேடை, ரயில்களின் சேவையில் மாற்றம், ரயில்கள் ரத்து தொடர்பான தகவல்கள் இடம் பெறும். ஆனால், இந்த செயலியை மேம்படுத்தாமல் இருப்பதால், அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதாக பயணியர் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து, ரயில் பயணியர் சிலர் கூறியதாவது: ரயில் வேயின் அதிகாரப்பூர்வ செயலியாக என்.டி.இ.எஸ்., உள்ளது. வழக்கமாக ரயில்கள் செல்லும் நேரம், வழித்தட விபரங்கள் இருக்கின்றன. ஆனால், ரயில்களின் சேவை மாற்றம், ரயில்கள் ரத்து போன்ற தகவல்கள் சரியாக இடம் பெறுவதில்லை. இதனால், உண்மையான தகவல் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. தினமும் பல லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் செயலியை தரம் உயர்த்தி, பயணியருக்கு சிரமம் இல்லாமல் தகவல் கிடைக்க, ரயில்வே துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர். இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'மொபைல் போனில் 'நெட்வொர்க்' பிரச்னை இருந்தாலும், செயலியில் தகவல் பெற முடியாது. இருப்பினும், பயணியர் புகார் குறித்து ஆய்வு செய்யப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை