உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் மதுவில் தவளை; மதுப்பிரியர் அட்மிட்

டாஸ்மாக் மதுவில் தவளை; மதுப்பிரியர் அட்மிட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: தவளை கிடந்த டாஸ்மாக் மதுவை குடித்தவர், -அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே உள்ள சென்னக்கரை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன், 33, கூலித் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் சிறுகாம்பூரில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில், மது பாட்டில் வாங்கினார். சென்னக்கரை பஸ் ஸ்டாப்பில், இருட்டில் அமர்ந்து அந்த மதுவை குடித்த போது, பாட்டிலில் அடைப்பு இருந்ததை அவர் உணர்ந்தார்.உடனே, மொபைல் போன் டார்ச் லைட் அடித்து பார்த்த போது, மது பாட்டிலுக்குள் இறந்து நிலையில் தவளை இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மது பாட்டிலுடன் டாஸ்மாக் கடைக்கு சென்ற வேல்முருகன், அங்கு விற் பனையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம் கூறினார். அதை பொருட்படுத்தாத டாஸ்மாக் ஊழியர்கள், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கையில் இருந்த மது பாட்டிலை பறித்து, கீழே வீசி உடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுகாம்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின், திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Saai Sundharamurthy AVK
ஜன 15, 2025 22:44

டாஸ்மாக்கில் அக்காமாலா - கப்சியா ???


Saai Sundharamurthy AVK
ஜன 15, 2025 22:34

அக்காமாலா காமெடி ஞாபகத்திற்கு வருகிறது.


வாய்மையே வெல்லும்
ஜன 15, 2025 13:38

தரித்திரத்தை தேடி அலையவேணாம் அது மாடலில் ஒளிந்து உள்ளது


அப்பாவி
ஜன 15, 2025 12:10

தவளையைக் கூட குடிகாரனாக்கிடும் டாஸ்மாக் வாழ்க.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 15, 2025 11:54

இந்த மதுப்பிரிய தொழிலாளிக்கு யாவாரம் பன்னுறதே திராவிட மாடல் மொதலாளிங்கதானே? அவங்கள பார்த்து இலவச சைட் டிஷ் தங்களுக்குப்பிடித்த நாடான சீன முறைப்படி குடுத்துருக்காங்க .... என்ஜாய் .....


venugopal s
ஜன 15, 2025 11:20

டாஸ்மாக் மதுவை விட தவளைக்கறி ஒன்றும் ஆபத்தானது இல்லை!


sankaranarayanan
ஜன 15, 2025 10:11

டாஸ்மாக் மதுவில் தவளை இதில் என்ன வியப்பு தண்ணீரில் அதாவது தண்ணீர் குடித்தே வாழும் ஜந்து இதற்கு குடிக்கிற எல்லா தண்ணீர்களிலும் வேறுபாடே தெரியாத பிராணி பாவம் குடித்தவனுக்கே நிதானம் தெரிவதில்லையே


Karthik
ஜன 15, 2025 10:07

Tasmacs pongal offer this Free side dish. Take it easy..


Oru Indiyan
ஜன 15, 2025 09:33

பொங்கல் பரிசு. மதுவுடன் தவளை. நாளை மதுவுடன் பாம்பு தருவார்கள்.


தமிழன்
ஜன 15, 2025 07:47

சரக்கோட சைடு டிஷ்யையும் சேர்த்து கொடுத்திருக்கிறானுகள் பொங்கல் ஆஃபராக இருக்கும் அடுச்சு தூர் வாரு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை