உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை, மதுரை மெட்ரோ திட்டத்திற்கு நிதி: மத்திய அரசிடம் கேட்கிறார் ஸ்டாலின்

கோவை, மதுரை மெட்ரோ திட்டத்திற்கு நிதி: மத்திய அரசிடம் கேட்கிறார் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன்,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.மத்திய நகர்ப்புற மற்றும் வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டாரை, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். தொடர்ந்து இருவரும் அதிகாரிகளுடன் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினர்.இதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: சென்னை மெட்ரோ இரண்டாவது கட்ட ரயில் திட்டம் குறித்து மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டாரை சந்தித்து பேசினேன். எனது கோரிக்கையை ஏற்று இரண்டாவது கட்ட ரயில் திட்டத்தை 118.9 கி.மீ., தூரத்திற்கு விரிவுபடுத்துவதற்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தேன். மேலும் இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்துவது குறித்து அவரிடம் விளக்கமளிக்கப்பட்டது.மேலும், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரைவாக நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். இவ்வாறு அந்த பதிவில் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

venugopal s
அக் 26, 2024 21:49

நமது தலையெழுத்து நம்மிடம் கொள்ளையடித்தவர்களிடமே போய் நிதியுதவி கேட்டு நிற்க வேண்டிய நிலை!


krishna
அக் 26, 2024 22:50

EERA VENGAAYAM VENU ENNA IPPADI KEVALAMA POI SOLLRA.THUNDU SEATTU KUMBALIDAM MODI KOLLAI ADITHAARAA.ULAGA MAHA JOKE.10 YEARS BJP CENTRAL AATCHIYIL ORU KUTRA CHAATU KOODA KIDAYAADHU.MAFIA KUMBAL GOPALAPURAM KUMBAL.UNAKKU 200 ROOVAA COOLIE KEDAIKKA IPPADIYA VEKKAM ILLAMA URUTUVA.


SVR
அக் 26, 2024 21:48

மத்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள். புதிதாக மெட்ரோ துவங்க வேண்டுமென்று நிதி கேட்டால் உங்கள் பங்கு வரியிலிருந்து அல்லது கடனாகவோ தயவு செய்து கொடுக்க வேண்டாம். மாநில அரசே நிதி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டியது தான் என்று சொல்லி விடுங்கள். என்னதான் நீங்கள் பணம் கொடுத்தாலும் இந்த மக்கள் அதை வாங்கிக் கொண்டு உங்களுக்கு எதிராகத்தான் இருந்தார்கள், இருக்கிறார்கள் இருக்க போகிறார்கள். உங்களுக்கு எதிராக யார் இல்லையோ அவர்களுக்கு உங்கள் தயவை காட்டுங்கள்.


Rpalnivelu
அக் 26, 2024 20:20

நிதிய வாங்கி வாங்கி ஊழல செஞ்சி செஞ்சி மேலை நாடுகளில் பதுக்கி, பின்னர் அதை முதலீடுகள் என்ற பெயரில் சலவை செய்வது. போதும்டா சாமி. இந்த திருட்டு த்ரவிஷ ஆட்சி.


GMM
அக் 26, 2024 19:53

தமிழகம் பணக்கார மாநில பிரிவு. அதிக செலவு பிடிக்கும் ரயில், விமான, தேசிய நெடுசாலை, துறைமுகம், தேசிய எல்லை பாதுகாப்புக்கு உரிய நிதி பொறுப்பு மத்திய அரசு. கோவில், அணைகள் கட்டியது மன்னர்கள். அடிப்படை பணிகள் உள்ளாட்சி அமைப்புகள். மாநில வரி பங்கு, பத்திர பதிவு, டாஸ்மாக் கடன் மற்றும் பல வருவாய். எந்த பெரிய செலவுகள் இல்லை. சம்பளம் மட்டும் தான் செலவு. தமிழகம் போன்ற மாநிலம் ஏன் நிதி கேட்க வேண்டும். ? மாநில நிர்வாகம் எதற்கு ? மக்கள் தொகையில் 10 சதவீதம் கீழ் தான் வரி. மக்கள், நிறுவனம் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து வரி செலுத்தி வருகின்றனர்? வீண் செலவை தடுக்க போவது யார். ?


Venkateswaran Rajaram
அக் 26, 2024 19:49

ஆமா ஓசியில பஸ், மாசம் மாசம் குடும்ப தலைவிகளுக்கு 1000 ஓசி புதுமை பெண்களுக்கு 1000 ஓசி ...இப்படி மக்கள் வரிப்பணத்தை எல்லாம் உமக்கு ஒட்டு வேணும்னு கொடுத்திட்டு ...கேவலமா இருக்கு ஆட்சி


Ganapathy
அக் 26, 2024 19:12

100 சதவீதம் எல்லாவரியும் ஏற்றியும் இன்னமும் மத்தியரசிடம் கடன் வாங்கி எங்களை மேலும் மேலும் கடனாளியாக ஆக்க உம்மை போன்ற கையாலாகாத ஒரு தெலுங்கன் முதல்வராக எதற்கு இருந்து எங்களை ஆள வேண்டும்? உலகம் சுற்றுவாய் குடுபத்தோடு ஆனா நாங்க, நீங்க வாங்கும் மத்தியரசின் கடனை கட்ட வேண்டுமா? ஆட்டையைப்போட கடனை கொடுத்தால் மத்தியரசு இல்லையேல் ஒன்றியரசு...


Ganapathy
அக் 26, 2024 19:05

உமது அரசு கையாலாகாத அரசு என்பது இதிலிருந்து தெரிகிறது. வரிவசூல் அரசின் அடிப்படையிலான வேலை. தமிழக திட்டங்கள் எல்லாவற்றுக்கும் மத்தியரசுதான் பணம் கொடுக்கணும்னு ஒரு முதல்வராக கேட்பதற்கும் முன் உமக்கு ஒரு கேள்வி: எங்களிடம் வசூலிக்கும் வரி பணம் எங்கு போகிறது?


Ramesh Sargam
அக் 26, 2024 18:52

கொடுக்கப்படும் நிதி முறையாக, நேர்மையாக, லஞ்சலாவண்யம் இல்லாமல் கொடுக்கப்பட்ட பணிக்கு போய்சேரவேண்டும். அதற்கு முதல்வர் பொறுப்பு ஏற்கவேண்டும். ஒரு ரூபாய் கணக்கில் வரவில்லையென்றால் கூட முதல்வரே பொறுப்பு.


தமிழ்வேள்
அக் 26, 2024 18:45

எத்தனை ஆயிரம் கோடிகளை அள்ளிக் கொடுத்தாலும் அந்த ஒற்றை குடும்பத்தின் பேய்ப்பசிக்கும் பண வெறிக்கும் உறை போடக் காணாது.. இவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை சிங்கிள் பைசா கூட தரக்கூடாது... இந்த குடும்பம் கொள்ளையடித்து வைத்துள்ள சொத்தை தமிழகத்துக்கு பயன்படுத்தினால் இன்னும் 20 ஆண்டுகளுக்கு பட்ஜெட் போட தேவையே இல்லை..அத்தனை திருட்டு பணம் கொட்டிக் கிடக்கிறது அந்த குடும்பத்திடம்


Lion Drsekar
அக் 26, 2024 17:59

இவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரின் பெயரிலும் நிதி மட்டும் இல்லை உண்மையான நிதியும் உள்ளது இவர்கள் நினைத்தால் அந்த நிதியிலேயே சொந்தமாக டிவி வைத்திருப்பதுபோல் மெட்ரோ அமைத்தால் அனைத்து வருமானமும் இவர்களது குடும்பத்துக்கே , இவர்கள் மாற்றி யோசித்து செயல்பட்டால் இந்த ஒரு துறை , குறையாக இல்லாமல் இருக்கும், என் நண்பர்கள் சிலர் கூறினார்கள் நான் பதிவு செய்த கருத்துக்களை வைத்து குறும்படம் தயாரித்ததாக அதுபோல் இவர்கள் இந்த செய்தியை மூலதனமாகக் கொண்டு சொந்தமாக மெட்ரோ திட்டத்தில் கூடுமான நிதிகளை அதாவது பெயர்கொண்ட நிதிகளை வைத்து துவங்கினால் குடுமப பொருளாதாரத்தோடு நாடும் பெயரும் புகழும் பெரும், வந்தே மாதரம்


Indian
அக் 26, 2024 18:26

மொக்கை கமெண்ட்


சாண்டில்யன்
அக் 26, 2024 20:00

மதிப்பு மிக்க நண்பரின் இந்த கருத்தை கண்டு அதிர்ச்சியாக உள்ளது என்ன ஆனது இவருக்கு? தொழில் தொடங்கலாம்தான் தற்சமயம் இந்த நாட்டுக்கு தூற்றுவதே நித்திய தொழிலாகி போனதே காலமெல்லாம் தூற்றப் படுவது ஒரே குடும்பம் மட்டுமே பிறர் யாருமே இந்த அளவுக்கு தூற்றப் படுவதில்லை. லார்சன் டியூப்ரோ கம்பெனிதான் ஹைதராபாத்தில் மெட்ரோ நிர்மானித்து இயக்குகிறது அவர்களே இங்கே செய்ய முடியுமா? பேருந்து போல இலவச பயண கோரிக்கை வருமே கூட்டுக் கொள்ளை என்று கூசாமல் பழி போடுவார்கள். சாம்சங் பட்ட பாடு மறந்து போனதா? அரசு அந்த கம்பெனிக்கு ஆதரவாக உள்ளதாக பழிபோட்டார்களே பேரும் புகழும் பெறுவது எங்கே?


புதிய வீடியோ