சென்னை: மத்திய அரசின் கீழ் செயல்படும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் (கெயில்) டெக்னீசியன் 139 (மெக்கானிக், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேசன், டெலிகாம்) பேர் உள்ளிட்ட 391 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 7ம் தேதி.கெயில் என்பது 'கேஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா' நிறுவனம். மத்திய பொதுத்துறை நிறுவனமான கெயில், 391 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியிட விவரம் வருமாறு:* ஜூனியர் பொறியாளர் (வேதியியல்)- 2* ஜூனியர் பொறியாளர் (மெக்கானிக்கல்) - 1* போர்மேன் (மின்சாரம்)- 1* போர்மேன் (Instrumentation)- 14* போர்மேன் (சிவில்)- 6* ஜூனியர் கண்காணிப்பாளர்- 5* ஜூனியர் வேதியியலாளர்- 8* ஜூனியர் கணக்காளர்- 14* தொழில்நுட்ப உதவியாளர் (ஆய்வகம்)- 3* ஆபரேட்டர் (ரசாயனம்)- 73* டெக்னீசியன் (மின்சாரம்)- 44* டெக்னீசியன் (Instrumentation)- 45* டெக்னீசியன்(மெக்கானிக்கல்)- 39* டெக்னீசியன் (டெலிகாம்)- 11* ஆப்பரேட்டர்(fire)- 39.கல்வித் தகுதி என்ன?
* ஐ.டி.ஐ., டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும்.வயது வரம்பு
* ஜூனியர் பொறியாளருக்கு 45 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.டி., எஸ்.சி., பிரிவினருக்கு 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.* போர்மேனுக்கு 33 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.டி., எஸ்.சி., பிரிவினருக்கு 43 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆப்ரேட்டருக்கு 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.விண்ணப்பிப்பது எப்படி?
https://gailonline.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்ப கட்டணம்
* விண்ணப்பக்கட்டணம் ரூ. 50. எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.தேர்வு செய்வது எப்படி?
எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு சென்னையில் நடைபெறும். 15 நாட்கள் மட்டுமே!
விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 7. இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ளது.