மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
11 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
11 hour(s) ago
காந்தி நினைவு நாளான ஜன- 30 மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.நாடு சந்தித்து வரக்கூடிய மத பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் மக்கள் அனைவரும் மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் வகையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்த மாவட்ட நிர்வாகிகளை கேட்டு கொண்டார்.இதையடுத்து இன்று சென்னை திமுக தலைமையகத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமைநிலைய செயலர் பூச்சி முருகன் மற்றும் திமுக நிர்வாககள் பலர கலந்துகொண்டனர். காப்போம் காப்போம்!மனித நேயம் காப்போம்!விலக்குவோம் விலக்குவோம்!மதவெறியை விலக்குவோம்!காப்போம் காப்போம்!வேற்றுமையில் ஒற்றுமை காப்போம்!உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பி உறுதி மொழியை ஏற்றனர்.
10 hour(s) ago | 1
11 hour(s) ago
11 hour(s) ago