உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் பரபரப்பை கிளப்பிய காஸ் டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்து; டிரைவர் கைது

கோவையில் பரபரப்பை கிளப்பிய காஸ் டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்து; டிரைவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவை காஸ் டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில், டிரைவர் ராதாகிருஷ்ணன் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.கேரள மாநிலம் கொச்சியில் இருக்கும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இருந்து சுமார் 18 மெட்ரிக் டன் காஸ் ஏற்றிக்கொண்டு, 'ஜோதி எல்.பி.ஜி.,' என்ற டேங்கர் லாரி (TN 28 BK 3540) கோவை கணபதி, எப்.சி.ஐ., ரோட்டில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை நோக்கி வந்தது. லாரியை தென்காசி மாவட்டம், கடையநல்லுார், சிவராம பேட்டையை சேர்ந்த ராதாகிருஷ்ணன், 29 ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை சுமார், 3:00 மணியளவில் கோவை அவிநாசி சாலை, உப்பிலிபாளையம் மேம்பால வளைவில், டிரைவர் டேங்கர் லாரியை திருப்ப முயன்றார். கட்டுப்பாடு இழந்த லாரியின், டேங்கர் இருக்கும் பகுதி இடது புறமாக சாய்ந்தது. இதில், லாரியின் முன்பகுதியையும், டேங்கர் பகுதியையும் இணைக்கும் (டேர்ன் பிளேட் பின்) பாகம் உடைந்தது. இதனால், காஸ் நிரம்பிய டேங்கர் சாலையில் கவிழ்ந்தது.டேங்கரில் இருந்து அளவீடு மீட்டர் (பிரஷர் காஜ்) உடைந்து, அதன் வழியாக காஸ் கசிந்தது. பதறிப்போன டிரைவர் ராதாகிருஷ்ணன், போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த, தீயணைப்பு துறையினர், ஐந்து தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன், காஸ் கசிவு ஏற்பட்ட இடத்தில், தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். பள்ளிகள், கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. காஸ் கசிவால் ஏற்படும் பாதிப்பை தடுக்க, மின்சார பணிகள் நிறுத்தப்பட்டன.11 மணி நேர நீண்ட போராாட்டத்திற்கு பிறகு, தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகன பாதுகாப்புடன், டேங்கர் லாரி கணபதியில் உள்ள, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. காஸ் கசிவால் எந்தவித பாதிப்பும் ஏற்படாததால், அனைவரும் நிம்மதி அடைந்தனர். டேங்கர் லாரி டிரைவர் ராதாகிருஷ்ணன், 'மேம்பாலத்தின் மேலே ஏறும்போது திடீரெனலாரியையும், டேங்கரையும் இணைக்கும் பாகம் உடைந்ததால், டேங்கர் தனியாக கழன்று சாலையில் கவிழ்ந்தது' என விளக்கம் அளித்து இருந்தார்.இந்நிலையில், இன்று (ஜன.,04) டிரைவர் ராதாகிருஷ்ணன் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இவர் அதிக வேகமாக லாரியை இயக்கி தான் விபத்து ஏற்பட்டதாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

வல்லவன்
ஜன 04, 2025 12:13

இதே அந்த லாரி ஒரு vip க்கு சொந்தமானால் நம்ம சிரிப்பு போலீஸ் கேஸ் போடுமா


Duruvesan
ஜன 04, 2025 11:56

கண்டிப்பா வேகமா போக வாய்ப்பு இல்லை,


தமிழ்வேள்
ஜன 04, 2025 10:49

இந்த மாதிரியான லாரிகள் ஸ்பீடு போகவே இயலாது..இது புரியாமல் போலீஸ் டிரைவர் மீது கேஸ் போடுகிறது..டர்ன் பிளேட் உடைந்தால் டிரைவர் என்ன செய்வார்? டிரைவர் விபத்து ஏற்பட்ட உடன் எஸ்கேப் ஆகாமல் உடனே போலீஸில் புகார் அளித்ததை பாராட்ட வேண்டாமா? இனி விபத்து ஏற்பட்டால் டிரைவர்கள் எஸ்கேப் ஆகவே வழி பார்ப்பார்கள்....


ديفيد رافائيل
ஜன 04, 2025 09:57

Driver speed போனதால தான் round bridge ல் திருப்ப முயற்சிக்க heavy loded lorry கவிழ்ந்தது.


N.Purushothaman
ஜன 04, 2025 19:53

பாஸ் ...அதிக எடையுள்ள புல்லட் காஸ் டாங்கரை அப்படிதான் கூறுவார்கள் மேம்பாலத்தில் ஏறும் போது இயற்கையாகவே உந்து சக்தி சற்று அதிகம் தேவைப்படும் ..அதற்காக அவர் வேகமாகி ஓட்டினார் என்றெல்லாம் முடிவிற்கு வந்து விட முடியாது ....அதே போல் இது போன்ற வாகனங்களை இயக்க எண்ணெய் நிறுவனங்கள் பல கடுமையான கட்டுப்பாடுகளை செயல்படுத்துகின்றனர்....ஆக ஓட்டுநர் பொறுப்பற்றவர் என்றோ அல்லது தாறுமாறாக ஓட்டினார் என்றோ அப்படி எளிதில் கூறி விட முடியாது ...இது போன்ற பல வாகனங்கள் தற்போது ஜி பி எஸ் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்படுகிறது ...அதனால் ஏமாற்ற முடியாது ...


ديفيد رافائيل
ஜன 04, 2025 09:55

Hello Dinamalar, இது 3.1.2024 4.20am நடந்த accident. ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப late news. நான் அப்பவே எதிர்பார்த்தேன் Dinamalar website ல news வரும்னு. இது தான் உடனுக்குடன் செய்தியா தினமலர். நான் இந்த சம்பவம் நடந்தப்ப அந்த இடத்துல தான் இருந்தேன். Polimer news channel ல் Madurai என்று தவறாக குறிப்பட்டிருந்தார்கள்.


ديفيد رافائيل
ஜன 04, 2025 10:16

சம்பவம் நடந்த தேதி 3.1.2025 4.20am


பெரிய ராசு
ஜன 04, 2025 13:48

நீ எதுக்கு கிடந்தது கூவூரே எதுவும் ஒட்டக பால் குடிச்சியா


vee srikanth
ஜன 04, 2025 09:34

மோசமான சாலைகளை அமைக்கும் அதிகாரிகளை என்ன செய்வார்களாம் ??


ديفيد رافائيل
ஜன 04, 2025 10:18

Bridge மேல road நல்லா தான் இருக்கு. எந்த damage ம் road patchwork எதுவுமே இல்லை.


Sankaran Srinivasan
ஜன 04, 2025 09:11

இது போன்ற ஆபத்தான பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை ஓட்ட அநுபவம் வாய்ந்த ஓட்டுனர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். 29 வயது இளைஞரை உபயோகித்த BPCL விபத்துக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்


ديفيد رافائيل
ஜன 04, 2025 10:24

Driver செய்த உருப்படியான காரியம் சம்பவம் நடந்த உடனே police க்கு தகவலை கொடுத்தது, அதனால தான் பெரிய அளவிலான விபத்துக் தவிர்க்கப்பட்டது.


புதிய வீடியோ