வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இரவில் போதையில் இருந்த மாரிமுத்து கற்பழித்து கொலைசெய்திருக்கிறார் .. இதற்கு டாஸ்மாக் அல்லது மதுவோ காரணமில்லை .. இந்த மது ஆர்வலர் அருந்திய மதுவை ஆராயவேண்டும் ..அதை விற்றவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் ..
திருநெல்வேலி: வீரவநல்லூரில் 17 வயது சிறுமியை போதையில் கற்பழித்து, கழுத்து நெரித்து கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அயன் சிங்கம்பட்டியை சேர்ந்த துரை மகன் மாரிமுத்து 26. இவர் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்தார்.சிறுமி வேறு ஒருவருடன் பழகுவதாக எண்ணி மாரிமுத்து ஆத்திரமுற்றார். நேற்று முன்தினம் இரவில் போதையில் இருந்த மாரிமுத்து வீரவநல்லூரில் காட்டுப்பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்றார். வேறு நபருடன் பழகுவது குறித்து அவருடன் தகராறு செய்து கழுத்தை துண்டால் நெரித்துக் கொலை செய்தார்.பின்னர் சிறுமியின் உடல் அருகிலேயே இரவு முழுவதும் இருந்துள்ளார். முன்னதாக ஒரு சிறுமியை கற்பழித்துள்ளதாக தெரிகிறது. வீரவநல்லூர் போலீசார் சிறுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாரிமுத்துவை கைது செய்தனர்