உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்கு கொடுத்தபடி ராஜ்யசபா சீட் தாருங்கள்: பிரேமலதா

வாக்கு கொடுத்தபடி ராஜ்யசபா சீட் தாருங்கள்: பிரேமலதா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா அளித்த பேட்டி: கடந்த 2024ம் லோக்சபா தேர்தலின்போது, 'தே.மு.தி.க.,வுக்கு ஐந்து எம்.பி., சீட்டும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்படும்' என, அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உறுதியளித்தபடியே, அதை செய்வர் என இதுவரை நம்புகிறோம். ஒருவேளை ஒப்பந்தத்தை மீறி, அ.தி.மு.க., தரப்பில் 'சீட்' கொடுக்கவில்லை என்றால், அடுத்து என்ன செய்ய வேண்டுமோ, அதை தே.மு.தி.க., செய்யும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jcszuf6t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0என்ன முடிவெடுக்கப் போகின்றனர் என்பதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே தவிர, அதற்காக யாரிடமும் போய் கெஞ்சப் போவதில்லை. தி.மு.க., லோக்சபா தேர்தலின்போது வாக்குறுதி அளித்தபடியே, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்துள்ளனர். இது மிகச்சிறந்த அணுகுமுறையாகவே பார்க்கப்படுகிறது. அரசியலில் நம்பிக்கையும் நேர்மையும் வார்த்தையும் தான் முக்கியம். அந்த வார்த்தைப்படி நடப்பவர்கள் மேல்தான் மக்களுக்கு நம்பிக்கை வரும். ஏற்கனவே, இரண்டு முறை வந்த வாய்ப்பை, ஒருமுறை அன்புமணிக்கும், வாசனுக்கும் கொடுத்தனர். அதை தே.மு.தி.க., மனதார ஏற்றுக்கொண்டது. எனவே, இம்முறை தே.மு.தி.க.,வுக்கு ராஜ்யசபா சீட் தர வேண்டியது அ.தி.மு.க.,வின் கடமை. தான் சொன்ன சொல்லில் உறுதியாக இருந்து, பழனிசாமி அதை காப்பார் என காத்திருக்கிறோம். கட்சி துவங்கிய நடிகர் விஜய்க்கு, அவருடைய கட்சியை எப்படி வளர்ப்பது என்பதும் நன்கு தெரியும். அவருக்கு யாரும் கட்சி நடத்த சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை.அண்ணா பல்கலையில் நடந்த பாலியல் வன்முறைக்கு காரணமான ஞானசேகரன் தண்டிக்கப்பட்டிருப்பது சரியே. ஆனால், அவருக்கு பின்னால் இருக்கும் பசுத்தோல் போர்த்திய புலிகளையும் கண்டறிந்து தண்டிக்க வேண்டும். அன்புமணியை அமைச்சராக்கியது தவறு என இப்போது சொல்கிறார் ராமதாஸ். அது காலம் கடந்த கண்டுபிடிப்பு. முதல்வரின் கொளத்துார் தொகுதியில் துணை நடிகைகளை ஆட வைத்து, அந்த ஆட்டத்தில் அமைச்சர் சேகர்பாபுவும் கலந்துகொண்டு நடனமாடியது கேலிக்கூத்து. இதை முதல்வரும் ரசித்தபடியே செல்வது அநாகரிகம். தமிழக பெண்களுக்கு, 1,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதால், தமிழகத்தில் வறுமை ஒழிந்து விடவில்லை. இனி தமிழகத்தில் ஒற்றைக்கட்சி ஆட்சி முறை இருக்கக்கூடாது; கூட்டணி ஆட்சி வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Matt P
மே 31, 2025 12:06

பதவி பதவி பணம் பணம் இது தான் அரசியல். கமலுக்கு பதவி கிடைச்சாச்சு. எனக்கோ என் மகனுக்கோ தம்பிக்கோ கிடைத்தாகணும். இவங்க மேல் சபை உறுப்பினராகி ஒன்றும் நாட்டுக்கு நன்மை விளைய போவதில்லை. இலவச பயணம் பெற்று டெல்லிக்கு போய் கேன்டீன்ல பகோடா பஜ்ஜி சப்பாத்தி உண்டு உறக்கம் போட்டு சலுகைகளை பெறுவதற்க்கு தான்.


Matt P
மே 31, 2025 12:01

பதவி பதவி பணம் பணம் இது தான் அரசியல் ...மக்கள் அப்புறம் தான். கமலுக்கு பதவி. எனக்கும் பதவி வேண்டும் மகன் தம்பி கொடுத்தாலும் சரி


Bhaskaran
மே 30, 2025 16:53

இல்லேன்னா என்ன பண்ணுவீங்க சைக்கோ குருமா முத்தரசன் கூட அறிவாலய வாசலில் நாலாவது செக்யூரிட்டி யாக நிற்கலாம் அவங்க மனசிருந்தா சட்டமன்ற தேர்தலில் உங்க தம்பிக்கும் புள்ளைக்கு ம் பெரிய மனசு பண்ணி சீட் தரலாம் ஆனால் உதய சூரியனில் நிற்கவேண்டும் சம்மதமா


Padmasridharan
மே 30, 2025 15:36

ஒத்த ஆள் ஜெயிக்கிற தில் யாருக்குமே இல்லாம போச்சுது இந்த நாட்டிலே. விஜய் ஒற்றைக்கட்சிதான். கூட்டணி வேண்டுமென்றால் அவருடன் வைத்துக்கொள்ளலாம். . 2 வி"ஜெய்"யும் வெற்றிக்கொடி நாட்ட இணைந்த கைகளாகும் திரையில் இணைந்தது போல அரசியலிலும் அவரிடத்தை நிரப்ப.


RAMAKRISHNAN NATESAN
மே 30, 2025 12:08

ஒரு காலத்துல எதிர்க்கட்சி... இப்போ ஒத்த ராஜ்யசபா சீட்டுக்காக புடிச்சு தொங்க வேண்டியதா இருக்கு .....


madhesh varan
மே 30, 2025 11:45

சீட்டு இல்லன்னா பணம், ஏதாவது ஒன்னு கொடுங்க,


madhesh varan
மே 30, 2025 11:44

ராஜ்யசபா சீட்டு குடுங்க,இல்லன்னா அதுக்கு தகுந்த பொட்டி பணத்தை குடுங்க


SP
மே 30, 2025 11:29

இதில் திமுக எவ்வளவோ பரவாயில்லை நேர்மையாகத்தான் நடந்து வருகிறது ஒரு நடிகருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுகிறார்கள் எடப்பாடியார் எல்லா விஷயத்திலுமே நம்பிக்கை துரோகம் தான் செய்து வருகிறார் .


Haja Kuthubdeen
மே 30, 2025 14:08

அஇஅதிமுகவால் வென்ற வாசன்..அன்புமனி என்ன செய்தார்கள்.திமுக நேர்மை உலகறியும்.லோக்சபா தேர்தலில் கமலஹாசனுக்கு சீட் இல்லை அதற்கு பதிலாக ராஜ்யசபா இடம் என்ற ஒப்பந்தம்.அதனால்தான் கமல் திமுகவிடம் கட்சியை அடகு வைத்தார்.தேமுதிக விற்கு லோக்சபா தேர்தலில் 5இடங்கள் கொடுத்தாகி விட்டது..


Appan
மே 30, 2025 09:11

அதிமுக என்ற கட்சி அழிந்து கொண்டு இருக்கிறது. பழனிச்சாமியின் எல்லா செயல்களும் கட்சியை அழிக்கிறது . போன ராஜ்ய சபா எம்.பி தேர்தலில் பாமகவுக்கு கொடுத்தார். என்ன நடந்தது ?. எம்பி ஆனபின் பாமக அதிமுகவுக்கு கல்தா கொடுத்தியது பிஜேபியுடன் கூட்டு சேர்ந்து அதிமுகவை எதிர்த்தது. . ஜெயகாலத்தில் இது நடக்குமா ?..சிந்தனை இல்ல கட்சி தலைவர் கட்சியை அழிக்கிறார் . அதிமுக ருக்க பழனிசாமியை விளக்க திறமை உள்ள ஒருவரை கட்சி தேர்ந்து எடுக்கணும். இல்லை கட்சி இல்லாமல் போய்விடும் .


Keshavan.J
மே 30, 2025 08:30

மேடம் இது புது விதமான பிச்சையாக இருக்கு. உங்களுடைய வோட்டு விகிதம் எத்தனை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை