உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோசடி செய்து பாமக முகவரி மாற்றம்: அன்புமணி மீது ஜிகே மணி குற்றச்சாட்டு

மோசடி செய்து பாமக முகவரி மாற்றம்: அன்புமணி மீது ஜிகே மணி குற்றச்சாட்டு

சென்னை: கபட நாடகத்தால் பாமகவின் தலைமை அலுவலக முகவரி மாற்றப்பட்டுள்ளது. இது மோசடி. ஏமாற்றுவேலை. கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் தான்,'' என பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி கூறியுள்ளார்.பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. இருவரும் மாறி மாறி கட்சி நிர்வாகிகளை நீக்கி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர், பாமக பொதுக்குழுவை கூட்டி அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், ராமதாஸ் தரப்பு அதனை ஏற்கவில்லை. ராமதாஸ் தான் தலைவர் என அவர் கூட்டிய பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சில நாட்களுக்கு முன்னர் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவதாக, ராமதாஸ் அறிவித்தார்.நிருபர்களை சந்தித்த பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி கூறியதாவது: தேர்தல் கமிஷனின் கடிதத்தை காட்டி பரபரப்பாக செய்தியாக, மக்களை நம்ப வைக்கும் செய்தியாக திசைதிருப்பும் செயல் நேற்று நடந்தது. மக்களை நம்ப வைக்க திட்டமிட்டு நடந்த மோசடி. கடந்த ஜூலை ல் தேர்தல் கமிஷன் ஒரு கடிதம் அனுப்பியது. அதில் தமிழகம், புதுச்சேரிக்கு பாமகவுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், ' தலைவர், பாமக, 10 திலக் தெரு, திநகர் சென்னை 17 ' என்ற முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த செய்தி ராமதாசுக்கும், பாமகவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாமகக்கு நிரந்தரமான முகவரி, ' தலைமை அலுவலகம், 63, நாட்டு முத்து நாயக்கன் தெரு, தேனாம்பேட்டை சென்னை' ஆகும். இது தான் பாமகவின் நிரந்தர முகவரி ஆகும்.ஆனால், எப்படியோ திசை திருப்பி, சூழ்ச்சி, கபட நாடகத்தால் முகவரி மாற்றப்பட்டுள்ளது. மோசடி செய்து முகவரி மாற்றப்பட்டுள்ளது. கடிதம் பாமக தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. முகவரி தேனாம்பேட்டை இல்லாமல், திநகருக்கு போயுள்ளது. இது ஏமாற்று வேலை.அதற்கு முன்னர் செப்., 9 ல் தேர்தல் கமிஷன் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. அதில் மாமல்லபுரத்தில் நடந்த பாமக பொதுக்குழுவில் தேர்வு செய்த நிர்வாகிகள் பட்டியலை பதிவு செய்து கொள்கிறோம் எனக்கூறியுள்ளது. இதில் யார் பெயரும் இல்லை.2022 ல் பாமக தலைவரான அன்புமணியின் பதவிக்காலம் 2025 ல் நிறைவு பெற்றது. தற்போது அவர் பதவியில் இல்லை. தலைவர் பதவியில் இல்லாதவர் மாமல்லபுரத்தில் எப்படி பொதுக்குழு கூட்ட முடியும். பாமக விதியின்படி கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஒப்புதல் இல்லாமல் நிர்வாகக்குழு, பொதுக்குழு, செயற்குழு செயல்படக்கூடாது. விதியை மீறி எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும். அவர் பொறுப்பில் இல்லை. கடந்த மே மாதம் நடந்த பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதற்கு செயற்குழு, பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. கட்சியின் நிறுவனர், தலைவர் ராமதாஸ்தான். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

pakalavan
செப் 16, 2025 20:21

ஒருத்தன் தன்னோட அப்பாவ நம்பாம ஒட்டு கேட்டவன், கட்டுன மனவி மேல சந்தேகப்பட்டு வீடியோ வச்சானாம்


திகழ்ஓவியன்
செப் 16, 2025 18:27

பெற்ற அன்னை மீதே பாட்டில் விட்டவன் , அப்பா பேச்சை ஒட்டுக்கேட்க கருவி வெச்சவன் , எல்லா வேலையும் செய்வான் , அப்பா சொத்து அக்கா தங்கைக்கு கொடுக்க கூடாது என்று பசுமை தாயகம் சவுமியா பேச்சை கேட்டதால் தான் இவ்வளவு பிரச்சனை?


SUBBU,MADURAI
செப் 16, 2025 19:44

திடல் ஓவியா நீ ஏன் எல்லாத்திலேயும் முந்திகிட்டு ஓடி வர்ற.. இது அவனுகளோட குடும்ப பிரச்சனை நாளைக்கு ரெண்டு பேரும் ஒண்ணு கூடிக்குவானுக அப்ப உன் மூஞ்சியை எங்கே கொண்டு போய் வைப்பாய்


ஆரூர் ரங்
செப் 16, 2025 20:25

கழகத்திலிருந்து விலக்கி வைத்துவிட்டு பிறகு கண்கள் பனித்தன. இதயம் இனித்ததுன்னு குடும்ப உறுப்பினரை கொஞ்சிக் குலாவியது யார்? குடும்பக் கட்சிகளில் இதெல்லாம் சகஜமப்பா.


பேசும் தமிழன்
செப் 17, 2025 09:00

அது தானே.... புரியும்படி சொல்லுங்கள்.... ஆனாலும் அவரது டாஸ்மாக் மூளைக்கு ஏறாது....அவர்களுக்கு தேவையெல்லாம்... 200 ரூபாய் குவாட்டர் ஓசி பிரியாணி மட்டுமெ.... அதற்க்காக எந்த அளவுக்கும் முட்டு கொடுப்பார்கள்.


Anand
செப் 16, 2025 18:25

இப்படி சொன்னால் தான் சோறுன்னு அழுகிய மாம்பழம் சொல்லுச்சு.


Moorthy
செப் 16, 2025 18:23

போதும்பா நீங்களும் உங்க பஞ்சாயத்தும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை