உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை; அமித் ஷாவிடம் நேரில் சொன்ன ஜி.கே.வாசன்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை; அமித் ஷாவிடம் நேரில் சொன்ன ஜி.கே.வாசன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த போது பேசியது என்ன என்று த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்து அவர் அளித்த பேட்டி; 2026 தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு, கள நிலவரம் குறித்து அவருடன்(அமித் ஷா) பேசினேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, அதை தி.மு.க., அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. மக்களை திசை திருப்ப பல்வேறு தேவையற்ற விஷயத்தை தி.மு.க., கூறுவது பற்றி தெரிவித்தேன்.தமிழகத்தில் பொறுப்புள்ள அமைச்சர் ஒருவரின் பேச்சு அநாகரிகமானது. அருவருப்பானது. இதுதான் அவர்களின் மாடலா என்று கேள்வி கேட்கிறேன். அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். கூட்டணிக் கட்சி தலைவர் என்ற முறையிலே இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது. தேர்தலுக்கு இன்னமும் ஒரு வருடம் உள்ளது. இன்றைய கள நிலவரம் குறித்து அவரிடம் பேசினேன். தமிழகத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேரும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்புசாமி
ஏப் 12, 2025 13:15

நாட்டு நடப்பை இவுரு சொல்லித்தான் தெரிஞ்சுக்கணுமாக்கும்.


T.sthivinayagam
ஏப் 11, 2025 21:40

ஹிந்தி மாநில காங்கிரஸ் என்ற பேர் மாற்றுங்கள் உங்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும்


morlot
ஏப் 11, 2025 21:30

Damaging the image of his father respected by all .


Barakat Ali
ஏப் 11, 2025 19:12

என்னது ???? அமித்துக்கு இது முன்னமே தெரியாதா ????


தஞ்சை மன்னர்
ஏப் 11, 2025 18:28

ஒரு தலைவர் என்றல் அனைத்து மாநில நடவடிக்கை பற்றியும் கேட்கவேண்டும் அப்படி கேட்டு இருந்தால் மணிப்பூர் பற்றியும் உ பி, ம பி அங்கு நடக்கும் சட்டவிரோத நடவடிக்கை மத மோதல்கள் பற்றியும் கேக்க வேண்டும் டபுள் சர்க்கார் பற்றியும் வினவு எழுப்பப்படவேண்டுமா என்று தெரிந்து கொள்ளவேண்டும்


Thetamilan
ஏப் 11, 2025 18:25

யாரும் கண்டுகொள்ளவில்லை . செய்தியாளர்களுக்கு போஸ் கொடுக்க இவர் வராதது ஏன்


C.SRIRAM
ஏப் 11, 2025 20:07

ரூபாய் இரு நூறு வந்தாச்சா . தமிழன் , பாரத் இப்படியெல்லாம் பெயர் வைத்து ஏமாற்ற முடியாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை