வீடு வீடாக செல்வது கேலிக்கூத்து
அ.தி.மு.க., ஆட்சியின்போது, காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டது. காக்கி சட்டையை பார்த்தாலே, மக்கள் பயந்து ஓடும் அளவுக்கு, இன்று நிலைமை மோசமாகி விட்டது. மக்களுக்கு சரியான ஆறுதல் கூற வேண்டிய நேரத்தில், 'காபி சாப்பிட்டீங்களா! ஓரணியில் திரள்வோம் வாருங்கள்' என, முதல்வர் அழைப்பு விடுத்து வீடு வீடாகச் செல்வது கேலிக்கூத்தாக உள்ளது.மக்களை அழைக்க, தி.மு.க.,வுக்கு எவ்வித தகுதியும், அருகதையும் இல்லை; தி.மு.க.,வின் சாயம் மக்கள் மத்தியில் வெளுத்து விட்டது. வரும் 2026 தேர்தலில், 'தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றி' என்ற கோஷம் அப்படியே உல்டாவாகப் போகிறது. - ஜெயராமன்அ.தி.மு.க., தேர்தல் பிரிவு செயலர்