உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரலாறு காணாத வகையில் உயரும் தங்கம்; ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை நெருங்கியது!

வரலாறு காணாத வகையில் உயரும் தங்கம்; ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை நெருங்கியது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.7,340 க்கும், சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ.58,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.59 ஆயிரத்தை நெருங்கியதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.பண்டிகை காலத்தில் தங்கம் விலை உயர்ந்து வருவது வாடிக்கையாக உள்ளது. அக்.,31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் வழக்கத்தை விட, தங்க நகைகள் விற்பனை வெகு ஜோராக இருக்கும். இதனால், கடந்த சில தினங்களாக தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வருகிறது.தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், தமிழகத்தில் அக்டோபர் 18ம் தேதி , 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,240 ரூபாய்க்கும்; சவரன் 57,920 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 105 ரூபாய்க்கு விற்பனையானது. அக்.,19ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 7,280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 58,240 ரூபாய்க்கு விற்பனையானது. அக்.,20ம் தேதி ஞாயிற்று கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.அக்.,21ம் தேதி திங்கள் கிழமை, சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூ.7,300க்கும், சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ.58, 400க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று(அக்.,22) தங்கம் விலையில் மாற்றம் இல்லை.இந்நிலையில், இன்று(அக்.,23) சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.7,340க்கும், சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ.58,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து, 112 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 மாதங்களில் மட்டும், தங்கம் விலை சவரனுக்கு, 10,000 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Constitutional Goons
அக் 23, 2024 21:31

மோடி மாஜிக் எடுபடவில்லை. இந்தியர்களின் அடிசுவடு பாமரர்களுக்கு எட்டாக்கனியாகி விட்டது.


சாண்டில்யன்
அக் 23, 2024 11:40

வரலாறு காணாத விலை உயர்வுன்னு போட்டு போர் போரா நகைகளின் படத்தை போட்டு வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வதேன்? நகை கடைகளில் கூட்டமும் குறையவில்லை நகை கடைகள் ஒவ்வொரு ஊரிலாக கிளைகள் திறப்பதும் ஒயவில்லையே இதில் மகிழ்ச்சியடைவது வட நாட்டு கொள்ளையர்களும் உள்ளூர் செயின் ஸ்நாச்சர்களுமே நேற்று ஒரு சங்கிலி பறிப்பில் பெண்ணை தெருவில் தரதரவென இழுத்து சென்ற ஒரு மனம் பதைபதைக்கும் சம்பவம்


P. VENKATESH RAJA
அக் 23, 2024 10:03

தங்கம் விலை உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது


புதிய வீடியோ