உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்க இ.டி.எப்., முதலீடு 578 சதவீதம் அதிகரிப்பு

தங்க இ.டி.எப்., முதலீடு 578 சதவீதம் அதிகரிப்பு

க டந்த செப்டம்பர் மாதம், தங்க இ.டி.எப்., திட்டங்களில், இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 8,363 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக, 'ஐ.சி.ஆர்.ஏ., அனாலி ட்டிக்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 578 சதவீதம் அதிகமாகும். தங்க இ.டி.எப்., திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த முதலீடு, கடந்த செப்டமபர் மாத நிலவரப்படி 90,136 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. செப்டம்பரில் மியூச் சுவல் பண்டு முதலீடுகள் சரிவு கண்டபோதிலும், வலுவான தங்க இ.டி.எப்., முதலீடுகளின் காரணமாக, பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் மொத்த சொத்தின் மதிப்பு, சிறிய உயர்வு கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை