உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு 

 ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு 

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 12,000 ரூபாய்க்கும், சவரன் 96,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 199 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து, 12,030 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, 96,240 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து, 207 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலை, ஒரே நாளில் கிலோவுக்கு 8,000 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த அக்., 15ல் எப்போதும் இல்லாத வகையில், வெள்ளி கிராம் விலை 207 ரூபாயாக அதிகரித்தது. பின், வெள்ளி விலை குறைந்த நிலையில், இரு மாதங்களுக்கு பின், நேற்று ஏற்கனவே இருந்த உச்ச அளவை எட்டியுள்ளது. இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், ''தொழிற்சாலைக்கான வெள்ளி பயன்பாடு அதிகரித்து வருகிறது. மேலும், எதிர்காலத்தில் வெள்ளிக்கான தேவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ''இதனால், முதலீட்டாளர்களின் பார்வை வெள்ளி பக்கம் திரும்பியுள்ளது. வெள்ளி மீது அதிக முதலீடு செய்யப்படுகிறது. இது போன்ற காரணங்களால் வெள்ளி விலை அதிகரித்து வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ