தாலிக்கு தங்கம் திட்டம்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில், கிரேடு ஏ - இன்ஜினியர் பணியிடங்களுக்கான தேர்வு, அடுத்த மாதம் நடக்க உள்ளது. இதற்கு, ரசாயனம், எலக்ட்ரிக்கல், கருவியியல் பிரிவுகளில், 65 சதவீத மதிப்பெண்களுடன், பி.இ., - பி.டெக்., முடித்தோர், வரும் 21ம் தேதிக்குள், 'www.iocl.com' என்ற இணையதளம் வாயிலாக விண்ணப் பிக்கலாம். தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ், 45 கோடி ரூபாயில், பயனாளிகளுக்கு வழங்குவதற்காக, தலா எட்டு கிராம் எடையுள்ள, 5,460 தங்க நாணயங்கள் வாங்க, சமூக நலத்துறை சார்பில், 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும், பள்ளி மாணவ - மாணவியருக்கு, 2026 - 27 ம் ஆண்டு, விலையில்லா 'பேக்', 'ஷூ' மற்றும் மலைப் பகுதிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, கம்பளி சட்டை, மழை ஆடைகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதற்காக, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் கழகம் 'டெண்டர்' வெளியிட்டுள்ளது. கால்நடை அறிவியல் மற்றும் அறிவியல் பட்டதாரிகள், விலங்கு நலன் உள்ளிட்ட 22 முதுநிலை பட்டய இணைய வழி படிப்புகளில் சேர, www.tanuvasdde.inஎன்ற இணைய தளத்தில் அக்., 3 வரை விண்ணப்பிக்கலாம்' என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் தொலைநிலைக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.