உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு கிராம் தங்கம் விலை ரூ.12 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்: சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2400 உயர்வு

ஒரு கிராம் தங்கம் விலை ரூ.12 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்: சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2400 உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (அக் 17) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.97,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,200க்கு விற்பனை ஆகிறது.சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், (அக் 15) ஆபரண தங்கம் கிராம், 11,860 ரூபாய்க்கும், சவரன், 94,880 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 207 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (அக் 16), தங்கம் விலை கிராமுக்கு, 40 ரூபாய் உயர்ந்து, 11,900 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 320 ரூபாய்க்கு அதிகரித்து, 95,200 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி கிராமுக்கு, 1 ரூபாய் குறைந்து, 206 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று (அக் 17) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.97,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,200க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் ரூ.12 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் தொட்டுள்ளது. ஒரு சவரனுக்கு தங்கம் விலை ஒரே நாளில் ரூ.2400 அதிகரித்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வெள்ளி நிலவரம்

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.203க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தாமரை மலர்கிறது
அக் 17, 2025 18:38

பிஜேபியின் சிறப்பான பொருளாதார வளர்ச்சியில், மக்களின் வாங்கும் சக்தி கூடியிருப்பதால், தினந்தோறும் தங்கம் விலை ஏறுவதில்லை ஆச்சரியம் ஏதுமில்லை. அடுத்த இரண்டு ஆண்டில், ஒரு சவரன் ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும். ஐந்தாண்டில் நாலு லட்சம் ரூபாய் ஆகும்.


A.Gomathinayagam
அக் 17, 2025 14:34

விலை ஏற ஏற தங்க நகைகள் அணிந்து தெருவில் செல்வது மிக மிக பாதுகாப்பற்றது .வீட்டில் வைத்தாலும் பாதுகாப்பு இல்லை .ஓன்று வங்கி லாக்கரில் வைக்க வேண்டும் அல்லது கடன் வாங்கி அவர்கள் பாத்து காப்பில் வைக்கலாம்


சந்திரசேகர்
அக் 17, 2025 12:34

பணக்காரர்கள் இருக்கிற பணத்தை எல்லாம் தங்கத்தின் மீது முதலீடு செய்து முடக்கி வைத்தால் பிறகு வேறு தொழில்களுக்கு எப்படி பணத்தை பயன்படுத்த முடியும். ஓகோ வேறு தொழில்களுக்கு வங்கியில் கடன் வாங்கி பிறகு கடன் தள்ளுபடி ஆகும். ஆகா ஓகோ என்ன ஒரு ஐடியா


இளந்திரையன் வேலந்தாவளம்
அக் 17, 2025 10:42

தேவை அதிகமாக இருப்பின் விலை ஏறும். மக்கள் நகை வாங்கி குவிக்கிறார்கள்... பிரியாணி கடை டாஸ்மாக் நகை கடை துணி கடை கு மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை . எதிரிக்கட்சிகளோ மக்களிடம் பணம் இல்லை என கூப்பாடு ‌போடும்


வேணு
அக் 17, 2025 09:57

எதனால் இந்த விலை உயர்வு பாவம் மக்கள் அரசாங்கம் விழித்துக் கொள்ள வேண்டும் மக்களுக்கு உதவ விலை நிர்ணயம் தேவை


புதிய வீடியோ