வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பொறுமையாக இருந்து பார்க்கவும் ஏறுவதை
அடுத்த மெகா price அதிகரிப்புக்கு சாவு மணி. எப்படியும் 4000 rupees வரை அதிகரிக்கும்.
சென்னை: சென்னையில் இன்று (அக்., 03) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது.சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் மிக அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், நம் நாட்டிலும் அதன் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த சில தினங்களாக ஒரே நாளில் இருமுறை தங்கம் விலை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்து வந்தது.நேற்று (அக் 02) மட்டும் தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் அதிகரித்து , 10,950 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து, 87,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இந்த சூழலில் இன்று காலை தங்கம் விலை குறைந்தது. 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.86,720க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.10,840க்கு விற்பனையானது. மாலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது. இதனால் விலை மீண்டும் 87 ஆயிரத்தை தாண்டியது. ஒரு சவரன் நகை ரூ.87,200க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.10,900க்கு விற்பனை ஆனது.அதேபோல, வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.3 குறைந்து ரூ.161க்கு விற்பனையாகி வருகிறது.
பொறுமையாக இருந்து பார்க்கவும் ஏறுவதை
அடுத்த மெகா price அதிகரிப்புக்கு சாவு மணி. எப்படியும் 4000 rupees வரை அதிகரிக்கும்.