சென்னை: சென்னையில் இன்று (செப்.,27) ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.56,800க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.7,100க்கு விற்பனை ஆகிறது.டாலர் விலை உயர்வு, போர் உள்ளிட்ட சர்வதேச நிலவரங்களால் உள்நாட்டில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 21ம் தேதி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 6,960 ரூபாய்க்கும்; சவரன், 55,680 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 98 ரூபாய்க்கு விற்கப்பட்டது.* செப்டம்பர் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தங்க சந்தைக்கு விடுமுறை. அன்று முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின.* செப்.,23ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 6,980 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 160 ரூபாய் அதிகரித்து, 55,840 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.* செப்.,24ம் தேதி 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனையானது. ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.56 ஆயிரத்துக்கு விற்பனையாகின. * செப்.,25ம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ரூ.56,480க்கும், கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7,060க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று(செப்.,26) தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.* இந்நிலையில் சென்னையில் இன்று(செப்.,27) ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.56,800க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.7,100க்கு விற்பனை ஆகிறது. தினமும் தங்கம் புதிய உச்சம் தொட்டு வருவதால், சுப காரியங்களுக்கு நகை வாங்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பாடு திண்டாட்டம் ஆகியுள்ளது.வெள்ளி விலை
சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.102க்கு விற்பனை ஆகிறது.