உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை சவரன் ரூ.74 ஆயிரத்தை கடந்தது

தங்கம் விலை சவரன் ரூ.74 ஆயிரத்தை கடந்தது

சென்னை : தமிழகத்தில் ஆபரண தங்கம் விலை விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து, 1 சவரன் நேற்று 72,120 ரூபாய்க்கு விற்கப்பட்டது; கிராம் தங்கம் முதல் முறையாக 9,000 ரூபாயை தாண்டியுள்ளது. இன்று (ஏப்.22 ) தங்கம் விலை 1 சவரன் ரூ.74, 320 ,கிராம் 9,290 க்கு விற்கப்படுகிறது. அமெரிக்கா - சீனா இடையில் நிலவும் வர்த்தக போர் உள்ளிட்ட சர்வதேச நிலவரங்களால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்கின்றனர். இதனால், உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், நம் நாட்டிலும் அதன் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u0y13v0d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,945 ரூபாய்க்கும், சவரன் 71,560 ரூபாய்க்கும் விற்பனையானது; வெள்ளி கிராம் 110 ரூபாய்க்கு விற்கப்பட்டது.ஞாயிற்றுக்கிழமை தங்கம் சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று தங்கம் கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து, முதல் முறையாக 9,000 ரூபாயை தாண்டி, 9,015 ரூபாய்க்கு விற்கப்பட்டது; சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து, 72,120 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இன்று (ஏப்.22 ) தங்கம் விலை 1 சவரன் ரூ.74, 320 ,கிராம் ரூ.9,290 க்கு விற்கப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 111 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இம்மாதம் 1ம் தேதி, தங்கம் கிராம் 8,510 ரூபாய்க்கும், சவரன் 68,080 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த மூன்று வாரங்களில் மட்டும் கிராமுக்கு 505 ரூபாயும்; சவரனுக்கு 4,040 ரூபாயும் அதிகரித்துள்ளது.இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:பரஸ்பர வரி விதிப்பு குறித்த முடிவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியாக இருப்பதாலும், கடுமையாக அதை அமல்படுத்தி வருவதாலும், உலகளவில் தங்கத்தின் மீது முதலீடுகள் குவிந்து வருகின்றன. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், தங்கம் விலை இன்னும் உயரும். உலக சந்தையில் கடந்த வாரம், 2.75 லட்சம் ரூபாயாக இருந்த, 31.10 கிராம் எடை உடைய 'அவுன்ஸ்' தங்கம் விலை, இந்த வார துவக்கத்திலேயே 2.92 லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது. நம் நாட்டில் மிக விரைவாக சவரன் 80,000 ரூபாயை தொடும். சவரன் விலை சராசரியாக 3,000 ரூபாய் - 4,000 ரூபாய் என, ஆண்டுதோறும் அதிகரித்து வந்த நிலையில், இந்தாண்டில் நான்கு மாதங்கள் கூட முடியாத நிலையில், 15,000 ரூபாயை எட்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மூன்றரை மாதங்களில்

ரூ.15,000 உயர்வுகடந்த 2024 ஜன., 1ல் தங்கம் சவரன், 47,280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அந்தாண்டின் இறுதி நாளான டிச., 31ல், 56,880 ரூபாய்க்கு விற்பனையானது. அந்தாண்டில் சவரன், 9,600 ரூபாய் அதிகரித்திருந்தது. இந்தாண்டு ஜன., 1ல் சவரன், 57,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதையடுத்து, கடந்த மூன்றரை மாதங்களிலேயே சவரனுக்கு, 14,920 ரூபாய் அதிகரித்துள்ளது. குறைந்த நாட்களில் இந்த அளவுக்கு தங்கம் விலை உயர்ந்து வருவது இதுவே முதல் முறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

thehindu
ஏப் 22, 2025 21:33

மோடி அரசின் ரகசியம் . அம்பானி அதானி போன்ற கும்பலுக்கு மட்டுமே சொந்தமாகிவிட்டது தங்கம் , கடந்த பத்தாண்டுகளில் இப்படி ஒவ்வொன்றாக நாட்டு மக்கள் இழந்து வருகிறார்கள்


Kundalakesi
ஏப் 22, 2025 18:29

நீங்க கண்டிப்பா ஊபிஸ் தான். வரி எப்படி விதிக்கப்படவேண்டும் மற்றும் அதன் பின் விளைவுகள் என்ன வென்று தெரியுமா...


அப்பாவி
ஏப் 22, 2025 13:11

அடுத்த தேர்தலுக்கு ஆளுக்கு பாஞ்சி குடுக்குற அளவுக்கு தங்கம்னு ஜூம்லா உடலாம்.


Sakthi,sivagangai
ஏப் 22, 2025 13:47

பல்லு போன காலத்தில் கூட உனக்கு இருக்கும் திமிறு அடங்க மாட்டேங்குது இன்னும் எத்தனை நாளைக்குதான் அந்த பாஞ்சி லட்சத்தை எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருப்ப மண்டை மண்ணுக்குள் போகும் போதாவது நல்ல புத்தியுடன் போய் சேர்.


இளந்திரையன் வேலந்தாவளம்
ஏப் 22, 2025 10:42

பழைய தங்கம் கையிருப்பு வைத்திருப்பவர்களுக்கு கொண்டாட்டம்.. வாங்க நினைப்பவர்களுக்கு திண்டாட்டம்


SUBBU,MADURAI
ஏப் 22, 2025 12:16

இந்திய குடும்பங்களில் சுமார் 25,000 டன் தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொகையானது உலகின் முதன்மையான 10 மத்திய வங்கிகளின் ஒருங்கிணைந்த தங்க கையிருப்பை விட கணிசமான அளவு பெரியது. இப்போது தங்கத்தின் விலை 3,398 டாலராக உயர்ந்துள்ளது. இந்த விலையில் 25000 டன் தங்கத்தின் மதிப்பை கணக்கிட்டால் அது $2.7 டிரில்லியன் ஆகும். ஆமா இந்தியா ஏழை நாடுதான்!


Kasimani Baskaran
ஏப் 22, 2025 04:12

30 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தபொழுது கிராம் 13 வெள்ளி... தங்கத்தில் அல்லது நிலத்தில் அன்று முதலீடு செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்... அப்பொழுதெல்லாம் தங்க மோகம் இந்த அளவுக்கு இல்லை.


தாமரை மலர்கிறது
ஏப் 22, 2025 01:18

இந்திய பொருளாதாரம் மிகச்சிறப்பாக உள்ளதால், பொதுமக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். தங்கத்தை பொதுமக்கள் வாங்குவதால், அந்நிய செலவாணி கையிருப்பு குறைகிறது. இதை தடுக்க, பொதுமக்கள் தங்கம் வாங்க ஜிஎஸ்டி வரியை ஐந்துலிருந்து முப்பது சதவீதமாக உயர்த்த வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை