உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2 ஆயிரம் அதிகரிப்பு: ஒரு சவரன் ரூ.1,02,560!

3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2 ஆயிரம் அதிகரிப்பு: ஒரு சவரன் ரூ.1,02,560!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (டிசம்பர் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,820க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளி மீது, சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். இதனால், நம் நாட்டில் அவற்றின் விலை உயர்ந்து வருகிறது. டிசம்பர் 23ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,770க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.234க்கு விற்பனை ஆனது. நேற்று(டிச.,24) தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, புதிய உச்சமாக, சவரன் 1,02,400 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையும் கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்தது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,820க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2 ஆயிரம் அதிகரித்துள்ளது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வெள்ளிக்கு மவுசு

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.245க்கு விற்பனை ஆகிறது. கடந்த சில தினங்களாக வெள்ளிக்கு மவுசு கூடி வருவதால், விலை அதிகரித்து வருகிறது. கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
டிச 25, 2025 17:32

வளர்ச்சி அமோகம். வளர்ந்த நாடாயிட்டோம் கோவாலு..


pv raja
டிச 25, 2025 13:53

தங்கம் விலை குறையாது போல இருக்கே,


முக்கிய வீடியோ