உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு; இன்றைய நிலவரம்!

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு; இன்றைய நிலவரம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 31) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.67,400க்கும், ஒரு கிராம் ரூ.8,425க்கும் விற்பனையாகிறது.தமிழகத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 29), 22 காரட் ஆபரண தங்கம் விலை, கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, 8,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 66,880 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று (மார்ச் 30) விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (மார்ச் 31) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.67,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,425க்கு விற்பனை ஆகிறது.ஒரு சவரன் தங்கம் விலை புதிய உச்சமாக ரூ.67 ஆயிரத்தை தாண்டி நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தாமரை மலர்கிறது
மார் 31, 2025 21:08

தங்கம் வாங்குவதற்கு முப்பது சதவீத ஜிஎஸ்டி வரியை கொண்டுவந்தால், தங்கத்தின் மீது மக்களின் மோகம் குறையும். அதனால், மற்ற பொருள்களை மக்கள் வாங்குவார்கள். பொருளாதாரம் மேலும் உயரும்.


Mediagoons
மார் 31, 2025 20:19

மோடி அரசில் பாமரர்களுக்கு எட்டாக்கனியாகி விட்டது


தாமரை மலர்கிறது
மார் 31, 2025 19:00

தங்கத்தின் விலை உயர்ந்து வருவதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் பொருளாதாரம் பத்து சதவீதம் புலிப்பாய்ச்சலில் பறப்பதால், இந்திய மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள் . விலை சக்கைபோடு போடுகிறது. உலகமே அலறும் வகையில் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் வளர்ந்துவருகிறது.


பெரிய ராசு
மார் 31, 2025 11:26

மக்களே யாரும் தங்கம் வாங்காதீர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை