உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.1,03,120க்கு விற்பனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.1,03,120க்கு விற்பனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (டிசம்பர் 26) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,890க்கு விற்பனை ஆகிறது.தங்கம், வெள்ளி மீது, சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். இதனால், நம் நாட்டில் அவற்றின் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (டிசம்பர் 24) ஆபரண தங்கம் கிராம், 12,800 ரூபாய்க்கும், சவரன், 1,02,400 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 244 ரூபாய்க்கு விற்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fxiq5ns4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேற்று (டிசம்பர் 25), தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 12,820 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 160 ரூபாய் அதிகரித்து, 1,02,560 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு, ஒரு ரூபாய் உயர்ந்து, 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இன்றைய நிலவரம்

இந்நிலையில் இன்று (டிசம்பர் 26) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,890க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 அதிகரித்து ஒரு கிராம் ரூ.254க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு 9 ஆயிரம் ரூபாய் அதிகரித்து, ஒரு கிலோ 2 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. தொடர்ந்து வெள்ளி, தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வருகிறது.

வாய்ப்பு குறைவு

இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: சர்வதேச முதலீட்டாளர்களின் பெரும்பாலான முதலீடுகள் தங்கமாகவே உள்ளது. வெள்ளியிலும் அதிக முதலீடுகள் குவிந்து வருவதால், அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கம் விலை மீண்டும் ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழே வரும் வாய்ப்பு மிக மிக குறைவு. தங்கம் விலை குறையும் என்ற எண்ணம் இருந்தால் கைவிட்டு விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Indian
டிச 26, 2025 20:21

முக்கிய தேவைகளுக்கு தங்கம் வாங்கித்தானே ஆகவேண்டும். அரசாங்கம் நினைத்தால் செய்யலாம்,. ஆனால் செய்ய மாட்டார்கள்


ஆரூர் ரங்
டிச 26, 2025 12:29

மக்களிடம் பணமில்லை என்றால் வாங்க ஆளிருக்காது. விலை தானாகவே குறையும்.


அப்பாவி
டிச 26, 2025 12:02

இந்த மாதிரி வளர்ச்சிக்கு தினமும் ஒரு மெடல் குத்திக்கலாம்.


புதிய வீடியோ