வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Ithu oru news kadavulay
சென்னை: சென்னையில் இன்று (அக் 24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.92,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் தங்கம் விலை உச்சத்தை எட்டிஉள்ளது. இந்நிலையில், சில தினங்களாக தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், (அக் 22) ஆபரண தங்கம் கிராம் 11,540 ரூபாய்க்கும், சவரன் 92,320 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 175 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (அக் 23), தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, 11,500 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 320 ரூபாய் சரிவடைந்து, 92,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 174 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று (அக் 24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.92,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,540க்கு விற்பனை ஆகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்து இருக்கிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 சரிந்து ஒரு கிராம் ரூ.171க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Ithu oru news kadavulay