உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு; ஒரு சவரன் ரூ.57,120!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு; ஒரு சவரன் ரூ.57,120!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.57,120க்கும், ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.7,140க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச மார்க்கெட் நிலவரப்படி, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக காணப்படும். டிசம்பர் 3ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.300 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57,140க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.40உயர்ந்து ரூ. 7130க்கும் விற்பனையானது. நேற்று (டிச.,04) தங்கம் விலையில் மாற்றமில்லை.இந்நிலையில் இன்று (டிச.,05) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.57,120க்கும், ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.7,140க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் விலை மீண்டும் ரூ.57 ஆயிரத்தை தாண்டியதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை