உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை; ஒரு சவரன் ரூ.63ஆயிரத்தை கடந்தது!

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை; ஒரு சவரன் ரூ.63ஆயிரத்தை கடந்தது!

சென்னை: சென்னையில் இன்று (பிப்.,05) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,905க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.63,240க்கும் விற்பனை ஆகிறது. தமிழகத்தில் ஜன.,31ம் தேதி ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, 61,840 ரூபாயாக அதிகரித்துள்ளது. கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து, 7,730 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 107 ரூபாய்க்கு விற்கப்பட்டது.பிப்.,01ம் தேதி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.61,960க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்துள்ளது. அதன் படி ஒரு கிராம் ரூ. 7,745க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நாளில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இரண்டாம் முறையாக உயர்ந்தது. கிராம் 7,790 ரூபாய்க்கும், சவரன் 62,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.நேற்று (பிப்.,04) தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 அதிரடியாக உயர்ந்தது. ஒரு கிராம் ரூ. 7,810க்கும், ஒரு சவரன் ரூ.62,480க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (பிப்.,05) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,905க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.63,240க்கும் விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.63 ஆயிரத்தை கடந்து நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.107க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

கத்தரிக்காய் வியாபாரி
பிப் 05, 2025 13:20

அடிக்கிற கொள்ளையை தங்கமாக மற்றும் தீயமுக ஆட்சியிலிருக்கும் வரை தங்கம் விலை குறையாது


V வைகுண்டேஸ்வரன்
பிப் 05, 2025 15:21

இவ்வளவு அறிவுகெட்டு மூளையே இல்லாததால் தான் நீங்கள் கத்தரிக்காய் விற்றுக் கொண்டிருக்கிறீர்கள். பரிதாபம். இன்னொரு விதத்தில் சந்தோஷம்.தங்கம் விலைக்கு திமுக காரணமா?? அந்த அளவிற்கு திமுக உலகப் புகழ் பெற்று சக்தி வாய்ந்த இயக்கம் என்று நீங்கள் எழுதியிருப்பது நல்லாருக்கு.


என்றும் இந்தியன்
பிப் 05, 2025 18:21

சொன்னது என்ன புரிதல் என்ன இதைத்தான் திராவிடம் என்பது.திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசியல் வியாதிகள் ஊழல் கொள்ளை அடித்து அதை பூராவும் தங்கம் வாங்கி ஒளித்து வைத்துக்கொண்டிருப்பதால் தான் தங்கம் விலை அதிகரிக்குமே தவிர குறையாது என்று அர்த்தம்


அப்பாவி
பிப் 05, 2025 11:06

தங்கத்தின் விலையும், டாலருக்கான ரூபாயின் மதிப்பும் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறுகின்றன. யாராவது ஜீ க்கு மெடல் குத்தி விடுங்களேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை