உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய உச்சத்தில் தங்கம் விலை; சவரன் ரூ.57 ஆயிரத்தை தாண்டியது!

புதிய உச்சத்தில் தங்கம் விலை; சவரன் ரூ.57 ஆயிரத்தை தாண்டியது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆபரண தங்கம் சவரன் விலை எப்போதும் இல்லாத வகையில் இன்று(அக்.,17) ரூ. 57 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் இன்று(அக்.,17) 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 7,160 ரூபாய்க்கும்; சவரன் 57,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக்.,15) 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,095 ரூபாய்க்கும்; சவரன், 56,760 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 103 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று(அக்.,16) தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து, 7,140 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 360 ரூபாய் அதிகரித்து, 57,120 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில், சென்னையில் இன்று (அக்.,17) 22 காரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து 7,160 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சவரன் ரூ.160 உயர்ந்து, ரூ.57,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் சவரன் விலை எப்போதும் இல்லாத வகையில் ரூ. 57ஆயிரத்தை தாண்டியது.

வெள்ளி விலை

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.103க்கு விற்பனையாகி வருகிறது. இந்த விலை உயர்வு விஷேச நாட்களுக்கு தங்கம் வாங்க நினைத்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R S BALA
அக் 17, 2024 13:47

கேரட்டும் தக்காளியும் விலை ஏறிடுச்சாம்..


Lion Drsekar
அக் 17, 2024 11:40

வழிப்பறி கொள்ளையர்கள் காட்டில் மழை, தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாட்டில் ஒரு சம்பவம் , இரவு திருமண நிகழ்வுக்கு சென்றுவந்த குடும்பம் வீட்டுக்குள் நுழைந்ததும், சிறிது நேரத்தில் குடும்பத்தாற்போல் திருடர்களும் உள்ளே சென்று எப்போதும்போல் துப்பாக்கியக் காட்டி மிரட்டி நகைகளைக் கொடுக்க மிரட்ட, அவர்கள் பயந்துகொண்டு எங்களிடம் நகைகள் இல்லை என்று கூற, அவர்கள் கையில் இருந்த கைபோனில் வீடியோ பதிவு செய்திருந்த இவர்கள் திருமண நிகழுவு மற்றும் வீடுவரை செல்லும்போதும் அவர்கள் அணிந்திருந்த நகைகளை சுட்டிக்காட்டி, வீட்டில்தான் வைத்திருக்கிறீர்கள் என்று மிரட்டி பறித்துச் இதனை அங்குள்ள தமிழ் பேசும் காவல் துறை உயர்ந்தஹ் பதவியில் இருக்கும் அதிகாரியே என்னிடம் பகிர்ந்து கொண்டது , ஆகவே அழகும் நகையும் உயிருக்கு ஆபத்து என்று அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டார், நகைகளை எதிர்கால சந்ததியினர் விற்று சம்பாதித்து, அரசாங்கத்துக்கு வரிக்கட்டி வாழலாமே தவிர அணிவது உயிருக்கு ஆபத்து, வந்தே மாதரம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை