உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை; சவரனுக்கு ரூ.320 குறைவு

தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை; சவரனுக்கு ரூ.320 குறைவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (அக் 23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் தங்கம் விலை உச்சத்தை எட்டிஉள்ளது. இந்நிலையில், சில தினங்களாக தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக் 21) ஆபரண தங்கம் கிராம் 12,000 ரூபாய்க்கும், சவரன் 96,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம் 182 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (அக் 22) காலை, தங்கம் விலை கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து, 11,700 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 2,400 ரூபாய் சரிவடைந்து, 93,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, 180 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று மாலை மீண்டும் தங்கம் கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து, 11,540 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 1,280 ரூபாய் சரிவடைந்து, 92,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 175 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு 460 ரூபாய், சவரனுக்கு 3,680 ரூபாய் சரிவடைந்தது. இந்நிலையில் இன்று (அக் 23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.11,500க்கு விற்பனை ஆகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4 ஆயிரம் சரிந்து நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.174க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Pandeeswari
அக் 23, 2025 15:35

நகை விலை கூடுவதால் பெண்கள் வெளியேறி செல்ல முடியாது கொள்ளையர்கள் அதிகரிக்கும்


தத்வமசி
அக் 23, 2025 12:32

தங்கத்தின் மீது தேவையில்லாத விலை உயர்வு. இதில் ஒரு சாரார் மட்டுமே பணத்தில் கொழிக்கின்றனர். மற்றவர்கள் தண்டம் அழ வேண்டியுள்ளது. இந்தியாவில் மட்டுமே உலகத்தில் இல்லாத சேதாரம். இதை பெரும் கொள்ளை என்றே சொல்ல வேண்டும். சர் அப்படியாவது சுத்தமான தங்கம் கொடுக்கிறார்களா என்றால் அதுவும் கிடையாது. இந்தியாவின் தங்கத்தின் தூய்மையை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவு. இதில் 22 கேரட் தங்கம் என்று நாடகம் வேறு. தங்கக் கடைகள் எல்லாம் நாடகக் கம்பெனிகள். யாரும் கேட்பார் இல்லாமல் இருக்கிறது. எல்லாவற்றிலும் தானாகவே வழக்கை எடுத்து விசாரணை செய்து நீதியை வழங்கும் நீதிமன்றம் கூட இந்த விஷயத்தில் மவுனமாக இருப்பது மிகவும் கொடிது. தங்கம் வாங்குபவர்களின் சேமிப்பை சூறையாடுகின்றன இந்த தங்ககக் கடைகள்.


Venkatesan Srinivasan
அக் 23, 2025 19:55

இந்தியாவில் மட்டுமே உலகத்தில் இல்லாத சேதாரம் - சேதாரம் தங்க ஆபரணங்கள் மேல் சகட்டு மேனிக்கு 15 - 20% வரை விதிக்கப்படுகிறது. மொத்த மதிப்பில் 20 - 25% செய்கூலி சேதாரம் என விலை நிர்ணயிக்கப்படுகிறது. தங்கம் வாங்குபவர் அந்த நிமிடமே வாங்கும் தங்கத்தின் மதிப்பின் மேல் சுமார் மூன்று வருட லாப வருவாய் இழக்கிறார். நீங்கள் ஒரு பொருளை உற்பத்தி செய்யும் போது 15 - 20% அளவு மூலப்பொருள் இழப்பை எதிர்கொள்வது என்பது பொருளாதாரத்தில் எங்கும் கேள்வி படாத ஒரு விஷயம். அறிவியலில் "Law of conservation of mass" அடிப்படையில் சிதறும் தங்க துகள்கள் கவனமாக சேகரிப்பு செய்யப்படுகிறது. ஆனால் அதன் விலை மதிப்பு வாங்குபவர் தலையில் சுமத்தப்படுகிறது. மற்றுமொரு விஷயம் தரம் அதாவது "காரட் சுத்தம்". ஆபரண தங்கம் "22 காரட்" என்பது 22 கிராம் சுத்த தங்கம் உடன் 2 கிராம் செம்பு கலந்த மொத்தமான 24 கிராம் உருக்கு. இதில் சுத்தமான தங்கத்தின் அளவு குறைக்கப்பட்டு செம்பு அளவு அதிகரிக்கப்பட்டால் அது சுத்தமான தங்கத்தின் அளவு மட்டுமே கொண்டு 21 காரட், 20 காரட், 18 காரட் என குறிப்பிடப்படுகிறது. மேலும் சில்லறை தங்க வர்த்தகத்தில் பழைய தங்க நகைகள் விற்பனை இல்லாமல் பரிமாற்ற முறை மட்டுமே பெரும்பாலான வணிகர்களால் பின்பற்றப்படுகிறது. இதனால் மக்கள் அவசரத்துக்கு பணம் பெற பெரும்பாலான கடைகளில் தங்க நகைகளை விற்க முடியாது. "எக்ஸ்சேஞ்ச்" என்ற சுழலுக்குள் மட்டுமே இருக்க முடியும்.


Bala
அக் 23, 2025 09:46

Intha news ah podatheenga